கற்கள் வீசுவதற்காக ஏழை முஸ்லிம் இளைஞர்களுக்கு பா.ஜ.க. பணம் கொடுக்கிறது.... திக்விஜய சிங் பகீர் குற்றச்சாட்டு

 
திக்விஜய் சிங்

கற்கள் வீசுவதற்காக ஏழை முஸ்லிம் இளைஞர்களுக்கு பா.ஜ.க. பணம் கொடுப்பதாக உறுதிப்படுத்தாத தகவல் கிடைத்துள்ளதாக திக்விஜய சிங் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தியன்று ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில்  வகுப்புவாத மோதல்கள் நடந்தன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வகுப்புவாத மோதல்கள் தொடர்பாக பா.ஜ.க.வை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. 

கர்கோன் சம்பவம்

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய சிங் தற்போது பா.ஜ.க. குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கற்கள் வீசுவதற்காக ஏழை முஸ்லிம் இளைஞர்களுக்கு பா.ஜ.க. பணம் கொடுப்பதாக உறுதிப்படுத்தாத தகவல் கிடைத்துள்ளதாக திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க.

திக்விஜய சிங் அண்மையில் டிவிட்டரில், கர்கோனில் நடந்த வகுப்புவாத வன்முறையின் போது எடுக்கப்பட்ட படம் என்று கூறி ஒரு படத்தை டிவிட் செய்து இருந்தார். அந்த படத்தில், சில இளைஞர்கள் மசூதியில் காவி கொடி ஏற்றியதை பார்க்கலாம். ஆனால் அந்த படம் பீகாரில் இருந்து எடுக்கப்பட்ட பழைய படம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திக்விஜய் சிங் கடும் விமர்சனத்துக்குள்ளானார்.