தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டோம் என்று சபதம் எடுத்தது உண்மைதான்.. பா.ஜ.க.வுக்கு தாவிய. திகம்பர் காமத்

 
திகம்பர் காமத்

தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டோம் என்று சபதம் எடுத்தது உண்மைதான் ஆனால் நான் மீண்டும் கோயிலுக்கு சென்று என்ன செய்வது என்று கேட்டேன் அதற்கு உங்களுக்கு எது சிறந்ததோ அதை செய்யுங்கள் என்று என்னிடம் கூறினார் என்று பா.ஜ.க.வில் இணைந்த 8 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான திகம்பர் காமத் தெரிவித்தார்.

கோவா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான திகம்பர் காமத் 7 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க. மாறினார்.  அதன் பிறகு திகம்பர் காமத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக, ஒரு கோயில் மற்றும் தேவாலயத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் விசுவாச உறுதிமொழி எடுத்ததைப் பற்றி  திகம்பர் காமத்திடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

காங்கிரஸ்

கடந்த பிப்ரவரியில் கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், தேர்தலில் வெற்றிபெற்று தேர்ந்ததெடுக்கப்பட்டால் கட்சியை கைவிட (வேறு கட்சிக்கு மாற மாட்டோம்)  மாட்டோம் என்று கோயிலில்  உறுதிமொழி எடுத்தனர்அதற்கு திகம்பர் காமத் பதிலளிக்கையில் கூறியதாவது: நான் கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். தேர்தலுக்கு முன் காங்கிரஸை விட்டு வெளியேற மாட்டோம் என்று சபதம் எடுத்தது உண்மை. 

பா.ஜ.க.

நான் மீண்டும் கோயிலுக்கு சென்று என்ன செய்வது என்று கடவுளிடம் கேட்டேன். உங்களுக்கு எது சிறந்ததோ அதை செய்யுங்கள் என்று கடவுள் என்னிடம்  கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார். கோவா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான திகம்பர் காமத், மைக்கேல் லோபோ,டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதார் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகிய 8 பேர் பா.ஜ.க.வில் இணைந்தனர். இதனையடுத்து கோவா சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 3ஆக குறைந்துள்ளது.