‘’சங்கி தம்பி டீ இன்னும் வரல... என்னோவோ 5 நிமிஷம்னு சொன்னியாமே ? ஆச்சா?’’

 
k

அஜித் நடித்த துணிவு படத்தில் இடம்பெற்ற வசனத்தை திமுகவினர் டிரெண்ட் செய்து வந்தனர்.   இதற்கு போட்டியாக விஜய் நடித்த வாரிசு படத்தில் இடம்பெற்ற வசனத்தை பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வது தான் சரியானது என்று ஆளுநர் ரவி சொன்னதிலிருந்து திமுக அதை பிடித்துக் கொண்டது.  இதை அடுத்து சட்டமன்றத்தில் நடந்த உரையிலும் ஆளுநர்,  தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தார்.  இது பெரும் சர்ச்சை ஆனது.  இதனால் கெட் அவுட் ரவி என்று திமுகவினர் டிவிட்டரில் இரண்டு செய்து வருகின்றனர்.  போஸ்டர் அடித்தும் விமர்சித்து வருகின்றனர்.

tr

 இதற்கு பதிலடியாக ஆளுநர் தனது பொங்கல் வாழ்த்து அழைப்பிதழில்,  தமிழ்நாடு என்று குறிப்பிடாமல் தமிழகம் என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால்,  ஆளுநர் மாளிகையில் நடந்த  விழா மேடையில் இருந்த பேனரில் தமிழ்நாடு என்று இருந்ததும், ஆளுநர் பேசும்போது தமிழ்நாடு என்று குறிப்பிட்டதும் தனிக்கதை.  

இது தெரியாமல் திமுக இந்த விழாவினை புறக்கணித்தது.    இந்த மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில்,   துணிவு படத்தில் ஆளுநரை தாக்கிப் பேசுவது மாதிரி அவரை எச்சரிக்கை விடுப்பது மாதிரி டயலாக் ஒன்று இடம் பெற்று உள்ளது . துணிவு திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி,  மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரை பார்த்து பேசும்போது,   ’’ரவீந்தர் இது தமிழ்நாடு.. உங்க வேலையை இங்கே காட்டாதீங்க’’ என்று எச்சரிக்கிறார்.  இது ஆளுநர் ரவியை பார்த்து திமுக சொல்வதாகவே  எடுத்துக் கொண்டு திமுகவினர் பரப்பி வருகின்றனர்.

இதே மாதிரி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில்  #5_நிமிடத்தில்_ஆட்சியே_மாறும் என்று  விஜய் பேசும் அரசியல் பஞ்ச் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.   இந்த வசனத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார்,   ‘’உண்மையா உபிஸ்?’’ என்று கேட்டிருந்தார். பாஜகவினர் இதை பரப்பி வருகின்றனர். இன்றைக்கும் இந்த ஹேஷ்டேக் டுவிட்டரின் டிரெண்டிங்கில் இருக்கிறது.

p

இதற்கு திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்திருக்கிறார்.  அவர்,   ‘’என்னோவோ 5 நிமிஷம்னு சொன்னியாமே ? ஆச்சா? உங்க சனாதன பாட்டன்களுக்கே நேரம் குறிச்சி சாதிச்சி முடிச்ச  இயக்கம்டா!’’ என்கிறார்.

அவர் மேலும்,  ‘’மந்திகளின் கவனத்துக்கு: மே 7, 2021 முதல் தற்போது வரை ~8,85,850 நிமிடங்கள்... அதாவது 1,77,170 ஐந்து நிமிடங்கள் ஆகின்றன. But சங்கி தம்பி நீங்க சொன்ன டீ இன்னும் வரல.  5 நிமிஷம் இல்ல 5 வருஷம் தரோம் வெச்சுக்க’’என்கிறார்.

மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின்,  ‘’ 5 நிமிடத்தில் ஆட்சி மாறும் என்று 5 மணி நேரமாக hashtag ஓட்டுவோம். இப்படிக்கு, வெட்கம் மானம் அறிவு ஏதுமற்ற 
#Sangithva’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.