சுவர் ஏறிக்குதித்து ஓடியது மறந்துபோச்சா? - எடப்பாடிக்கு ஞாபகப்படுத்தும் அமைச்சர் மெய்யநாதன்

 
m

கஜா புயலின் போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறவில்லை.  அப்போதைய அமைச்சர் ஓ. எஸ். மணியனை அவரது தொகுதி மக்களே முற்றுகையிட்டு விரட்டி அடித்தார்கள்.   வேறு வழி இன்றி அவர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்றார்.  இந்த நிலையில் தற்போதைய  பருவ மழையினால்  மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அரசு நடவடிக்கை குறித்து எடப்பாடி பழனிச்சாமியும்,  ஓ. எஸ். மணியனும் விமர்சனம் செய்தது குறித்து அமைச்சர் மெய்யப்பன் கடுமையாக சாடி இருக்கிறார்.

 மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அதி கனமழை பெய்து அம்மாவட்டம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.  முதல்வர் மு .க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். 

e

 இந்த நிலையில் சுற்றுச்சூழல் காலநிலை துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களின் குறைகளை அறிந்தார்.  அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   எடப்பாடி பழனிச்சாமி வந்த இடத்தில் போகிற போக்கில் வார்த்தைகளை அள்ளி தெளித்துச் சென்றிருக்கிறார்.   கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களை அப்போது  முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்க்கவில்லை.  ஆனால் இப்போது முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்திருக்கிறார்.  அதிமுகவினர் உண்மைக்கு மாறான பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கிறார்கள். 

 கஜா புயலில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் தன் சொந்த தொகுதி மக்களாலேயே முற்றுகையிடப்பட்டு சுவர் ஏறி குதித்து ஓடினர்.  ஆனால் நாங்கள் தற்போது வரை மக்களுக்கான களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

 திமுகவின் செயல்பாட்டை பற்றி ஓ. எஸ். மணியன் விமர்சித்து வருகிறார். அவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்.  அதனால் அவர் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.