ரகசியங்களை அம்பலடுத்த வேண்டுமேன்றே பேசினாரா பொன்னையன்?

 
au

அது மிக்கிரி குரல் அல்ல.  பொன்னையனின் ஒரிஜினல் வாய்ஸ்.  17 நிமிடங்கள் என்னிடம் பேசினார். அதற்கான  ஆதாரங்கள் உள்ளன என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் நாஞ்சில் கோலப்பன்.  விசயங்கள் வெளியே தெரியவேண்டும் என்று வேண்டுமென்றேதான் பொன்னையன் பேசினார். இப்போது ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை என்கிறார்.

இன்றைக்கு அதிமுகவில் நடக்கும் அத்தனை பிரச்சனைக்கும் காரணகர்த்தா தளவாய் சுந்தரம் தான்.  அவர்தான் ஒற்றை தலைமை  விவகாரத்தை ஆரம்பித்து வைத்தார். அதுதான் இன்னைக்கு இன்று அளவிற்கு வளர்ந்து நிற்கிறது என்று அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியானது.  அந்த ஆடியோவில் மேலும்,  தங்கமணியும்,  கே. பி. முனுசாமியும் ஸ்டாலின் பக்கம் போய் விட்டார்கள்.  ஸ்டாலினை இருவரும் விமர்சிப்பதை நிறுத்திவிட்டார்கள். 

p

 துரைமுருகன் மூலமாக பெட்ரோல் பங்கை வாங்கி இருக்கிறார் கேபி முனுசாமி. அதன் மூலமாக கே.பி முனுசாமிக்கு மாதம் 2 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. எடப்பாடியை ஓரங்கட்டும் வேலைகளை செய்து வருகிறார் கேபி முனுசாமி.  ஓபிஎஸ் இடம் சமாதானம் பேச ஈபிஎஸ் முடிவு எடுத்திருந்தார்.  ஆனால் சுற்றி இருந்தவர்கள் அவரை பேச விடவில்லை.   எல்லாரும் தொண்டர்களை பற்றி நினைக்கவில்லை பணத்தைப் பற்றி தான் எல்லோரும் நினைத்து அதற்காக போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

 கொங்கு மண்டலத்தில் அத்தனை எம்எல்ஏக்கள் இருந்தும் 9 பேர் தான் எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.  மற்றவர்கள் வேலுமணி , தங்கமணியின் பிடியில் தான் இருக்கிறார்கள்.   தன் பதவியையும் தனது அதிகாரத்தையும் காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லோரும் சொல்வதைக் கேட்டு எடப்பாடி இந்த முடிவை எடுத்துவிட்டார் என்று கட்சியில் தற்போது ஏற்பட்டிருக்கும் சிக்கல்களை, ரகசியங்களை வெளியில் போட்டு உடைத்து இருக்கிறார் பொன்னையன்.  இதனால் அதிமுகவிற்குள் மட்டும் அல்லாது தமிழக அரசியல்  பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.  

 இதை அடுத்து அது தான் பேசிய ஆடியோ அல்ல .   என் குரலை போல மிமிக்கிரி செய்யப்பட்டு இருக்கிறது என்று பொன்னையன் விளக்கம் அளித்து இருந்தார். கன்னியாகுமரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் நாஞ்சில் கோலப்பனிடம் பேசவில்லை என்று சொன்னதற்கு, கோலப்பன் விளக்கம் அளித்திருக்கிறார். 

அது மிமிக்கிரி குரல் அல்ல பொன்னையன் பேசிய ஒரிஜினல் வாய்ஸ்.  17 நிமிடங்கள் என்னிடம் பேசினார் அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் நாஞ்சில் கோலப்பன் .

po

அவர் மேலும்,  பொன்னையன் அதிமுகவின் மூத்த தலைவர்.  எம்ஜிஆர் ரோடு இருந்து அரசியல் செய்த அவரிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது . அவரை மிமிக்ரி செய்தெல்லாம் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை.  எம்ஜிஆர் உடன் கம்பீரமாக நடந்து வந்த பொன்னையனை இந்த குள்ளநரிகளுடன் பார்ப்பது மனதிற்கு வேதனை அளிக்கிறது.  அதனால் அவருடன் கடந்த ஒன்பதாம் தேதி இரவு 10 மணியளவில் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் போனில் பேசினேன். அப்போது அவர் மனதில் இருக்கும் குமுறலை என்னிடம் கொட்டி தீர்த்தார் .

  நான் தீவிர ஓபிஎஸ் ஆதரவாளன் என்பது அவருக்கு தெரியும்.   எனக்கும் அவரை தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும்.  இந்த உரையாடல் வெளியே வரவேண்டும் என்றுதான்  பொன்னையனும் என்னுடன் பேசினார்.  பொன்னையன் உடன் பேசியதை நண்பர் ஒருவரோடு பகிர்ந்து இருந்தேன்.  அந்த ஆடியோ தான் இப்போது பரவி இருக்கிறது.  அவருடன் பேசியதற்கான ஆதாரம் என்ன இடம் இருக்கிறது.  அந்த ஆதாரத்தை எங்கு வேண்டுமானாலும் காட்ட தயாராக இருக்கிறேன். பொன்னையன்   அப்படி பேசிவிட்டு இப்போது ஏன் பயப்படுகிறார் என்று தெரியவில்லை? என்கிறார்.