அதிமுகவை கைப்பற்றுவதே சசிகலாவின் நோக்கம் - திவாகரன்

 
Dhivakaran

அதிமுகவை  கைப்பற்றுவதுதான் வி.கே.சசிகலாவின் நோக்கம். இதற்கு காலம் பதில் சொல்லும். சசிகலா  தலைமையில்  அதிமுகவை கொண்டு செல்ல  ஒரு சிலரை தவிர  அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக உள்ளதாக  சசிகலாவின் சகோதரர் திவாகரன்   தெரிவித்துள்ளார். 

Sasikala's nephew Dhinakaran, brother Dhivakaran patch up to tighten grip  over AIADMK - India News

அண்ணா திராவிடர் கழகத்தின் 5 ஆம்  ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் அண்ணா, பெரியார், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வி.கே.சசிகலா, “சிறையிலிருந்து வந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. கட்சியில் ஒரு எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்கள் தீர்மானத்தை இன்னும் பெரும்பாலான  அதிமுகவினர்  ஏற்று கொண்டுள்ளார்கள்.  

ஆறுமுகசாமி விசாரணை முடிவுற்றது அறிக்கை வெளிவரவில்லை. இதை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஏனென்றால் அநியாயமாக பல உயிர்கள் பலியாகி விட்டது. சசிகலாவின் அடுத்த முடிவு எப்படி இருக்கும், அவர் என்ன மாதிரி நடவடிக்கை  எடுக்க போகிறார், சிதறி கிடக்கும் அதிமுகவை சீரமைக்க முடிந்தால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம். சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளோம். சசிகலா ஒரு பெண் அவருடன் சுற்றியுள்ளவர்கள் நல்ல செய்திகளை சொல்லி கொடுக்க வேண்டும். 

சசிகலா  தலைமையில் தலைமையேற்க  ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர். வி.கே.சசிகலாவின் நோக்கம் அதிமுகவை  கைப்பற்றுவது. இதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுகவில் சம்பாதித்தவர்கள் ஒரு போதும் அதிமுகவிற்கு துரோகம் செய்ய கூடாது. அதிமுகவிற்கு தற்போது சோதனையான நேரம் இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இயக்கத்தை அழிக்க கூடாது, அதிமுகவை  மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு உண்மையான அதிமுகவினர் ஒன்று சேர வேண்டும்” என தெரிவித்தார்.