மீண்டும் தர்மயுத்தமா? ஜெ., நினைவிடம் செல்லும் ஓபிஎஸ்

 
pp

ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் தர்ம யுத்தத்தை தொடங்குகிறார் ஓ. பன்னீர்செல்வம் என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.   அவர் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்று சொல்லி இருந்த நிலையில் , தற்போது ஜெயலலிதா நினைவிடத்திற்கு  செல்லவிருப்பதால் இந்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

 அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் இறுதி கட்டத்திற்கு வந்து இருக்கிறது.   எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியின் 95 சதவீத ஆதரவு இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்திற்கு இருந்த 12 மா.செ. ஆதரவாளர்களில் தற்போது 6 பேர் எடப்பாடி பக்கம் சாய்ந்து விட்டார்கள் .  

நாளை பொதுக்குழு நடைபெறவிருக்கும் நிலையில்  அதற்கு தடை கோரி பன்னீர்செல்வம் ஆவடி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகார் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் அடுத்து என்ன செய்யலாம் என்று ஓபிஎஸ் தரப்பு ஆலோசித்து வருகிறது.

ee

பொதுக்குழுவுக்கு வாருங்கள் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர் செல்வத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.  ஆனால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

 இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஓபிஎஸ் ஓரங்கட்டபப்படுவதால் ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .  அது குறித்து ஓ.  பன்னீர்செல்வம்,  ‘’மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் அவர்கள் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்’’ என்று சொல்லியிருந்தார்.

 இந்த நிலையில் அவர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வதால் மீண்டும் தர்மயுத்தம் நடத்த திட்டமிட்டு இருக்கிறாரா என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.