மதரஸாக்களில் இனி தேசியவாதத்தை ஊக்குவிக்கும் கல்வி கற்பிக்கப்படும், தீவிரவாதம் அல்ல.. பா.ஜ.க. அமைச்சரால் புதிய சர்ச்சை

 
மதரஸா

உத்தர பிரதேச்ததில் உள்ள மதரஸாக்களில் தேசியவாதத்தை ஊக்குவிக்கும் கல்வி கற்பிக்கப்படும், தீவிரவாதிகளின் கதை அல்ல என்று பா.ஜ.க. அமைச்சர் தரம்பால் சிங் பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் தரம்பால் சிங்.  இவர் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி பயிலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர் தரம்பால் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:  மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின்படி, மாநிலத்தில் உள்ள மதரஸாக்களில் கல்வி அளிக்கப்படும்.

தரம்பால் சிங்

மாநிலத்தின் மதரஸாக்களில் மாணவர்களுக்கு தேசியம் கற்பிக்கப்படும். தீவிரவாதிகள் குறித்த பேச்சு இருக்காது. மாணவர்களுககு வணிக கல்வியும் கற்றுக் கொடுக்கப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட அனைத்து வக்ப் நிலம் மற்றும் சொத்துக்களை மீட்டெடுக்கும். சிறுபான்மையினர் நலனுக்காக அவை பயன்படுத்தப்படும். .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க.

தரம்பால் சிங், மதரஸாக்களில் தேசிய கற்பிக்கப்படும், தீவிரவாதம் அல்ல என்று பேசியிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேசமயம் சமீபகாலமாக பா.ஜ.க. அரசு கல்வியை காவிமயமாக்க முயற்சி செய்வதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.