பா.ஜ.க.வை முதுகில் குத்தி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் சென்றீர்கள்... உத்தவ் தாக்கரேவை தாக்கிய பட்னாவிஸ்

 
நிலவில் எல்லா குடும்பத்துக்கும் பிளாட் என்பது மட்டும்தான் இல்லை-காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்

பா.ஜ.க.வை முதுகில் குத்தி காங்கிரஸ்  மற்றும்  தேசியவாத காங்கிரஸூடன் சென்றீர்கள் என்று உத்தவ் தாக்கரேவை தேவேந்திர பட்னாவிஸ் தாக்கினார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களுக்கு முன் உத்தவ் தாக்கரே தனது ஆதரவு சிவ சேனா குழு தலைவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது உத்தவ் தாக்கரே பேசுகையில்,  மும்பை மாநகராட்சி தேர்தல்கள் தேவேந்திர பட்னாவிஸின் கடைசி தேர்தல்கள் என்றும் ஒரு மாதத்துக்குள் மும்பை மாநகராட்சி தேர்தலை நடத்த  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் சவால் விடுத்தார்.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரேவின் பேச்சுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்துள்ளார். மகாராஷ்டிரா துணை முதல்வரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், 2019 மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் நீங்கள் (உத்தவ் தாக்கரே) பிரதமர் மோடியின் புகைப்படத்தை காட்டி (ஆட்சிக்கு) வந்தீர்கள். பா.ஜ.க.வை முதுகில் குத்தி காங்கிரஸ்  மற்றும்  தேசியவாத காங்கிரஸூடன் சென்றீர்கள். 

காங்கிரஸ், சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்

நீங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸூடன் சேர்ந்து, என்னை ஒழிக்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்தீர்கள், அப்போது உங்களால் என்னை ஒழிக்க முடியவில்லை, பின்னரும் செய்ய முடியாது என தெரிவித்தார். மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா-பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.