இரண்டரை ஆண்டுகள் மட்டுமல்ல, அடுத்த 5 ஆண்டுகளுக்கும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்.. பட்னாவிஸ்

 
தேவேந்திர பட்னாவிஸ்

வரும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமல்ல, (தேர்தலில் வெற்றி பெற்று) அடுத்த 5 ஆண்டுகள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று காங்கிரஸூக்கு பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

மகாராஷ்டிராவில் தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவ சேனா-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு நீண்ட நாள் நீடிக்காது என காங்கிரஸ் தெரிவித்து வரும் நிலையில், வரும் இரண்டரை ஆண்டுகள் மட்டுமல்ல, (தேர்தலில் வெற்றி பெற்று) அடுத்த 5 ஆண்டுகள் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.

காங்கிரஸ்

மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட பா.ஜ.க.வின் முக்கிய தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில் கூறியதாவது: வரும் இரண்டரை ஆண்டுகள் கர்ம யோகத்திற்கானது. மகாராஷ்டிராவை நாட்டின் முதல் மாநிலமாக மாற்ற 24 மணி நேரமும் உழைப்போம். இந்த இரண்டரை ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்வது மட்டுமின்றி, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம்.

உத்தவ் தாக்கரே

கடந்த திங்கட்கிழமையன்று மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மறைமுகமாக தாக்கினார். தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தலைமை பற்றாக்குறை காணப்பட்டது. ஆனால் மக்களுக்காக எப்போதும் இருக்கும் இரண்டு தலைவர்கள் (ஏக்நாத் ஷிண்டே மற்றும்  தேவேந்திர பட்னாவிஸ்) அவையில் உள்ளனர் என தெரிவித்தார்.