உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்து விட்டார்.. தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்து விட்டார் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
ரூ.1,034 கோடி பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவத்தின் சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் முடக்கியது. அமலாக்க இயக்குனரகத்தின் இந்த நடவடிக்கை மகாராஷ்டிராவின் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின் விளைவு என்று சஞ்சய் ரவுத் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பா.ஜ.க. தலைவர்கள் தவறுகள் செய்யாதபோதும் அவர்களின் வீடுகளுக்கு மகா விகாஸ் அகாடி அரசாங்கம் அதிகாரிகளை அனுப்புகிறார்கள். அவர்கள் (பா.ஜ.க. தலைவர்கள்) நீதிமன்றத்தை நம்புவதால் அவர்கள் அங்கு செல்கிறார்கள். ஆனால் ஆதாரங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுக்கும்போது அவர்கள் (ஆளும் கட்சியினர்) மோசமாக பேசுகிறார்கள்.
போலி மதச்சார்பின்மை வரிசையில் உத்தவ் தாக்கரேவும் சேர்ந்து விட்டதாக தெரிகிறது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அவர் ஒலி பெருக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஒலி பெருக்கிகளில் ஹனுமன் பாடல் ஒலிக்கும்போது, அவை கைப்பற்றப்பட்டன. அதாவது உத்தவ் தாக்கரே போலி மதச்சார்பற்ற அரசியலில் இணைந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.