அவுரங்கசீப்பின் அடையாளத்தை கண்டு நாய் கூட சிறுநீர் கழிக்காது... ஓவைசிய தாக்கிய தேவேந்திர பட்னாவிஸ்

 
மீண்டும் தேர்தலில் போட்டியிட தயாரா? சிவ சேனாவுக்கு சவால் விடுத்த தேவேந்திர பட்னாவிஸ்…

அவுரங்கசீப்பின் கல்லறைக்கு அசாதுதீன் ஓவைசி செல்வதை குறிப்பிட்டு, அவுரங்கசீப்பின் அடையாளத்தை கண்டு நாய் கூட சிறுநீர் கழிக்காது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பா.ஜ.க.வின் மகாசங்கல்ப் சபா நடைபெற்றது. அதில், அம்மாநில முன்னாள் முதல்வரும், பா.ஜ.க.வின் பிரபல தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ.க. தொண்டர்களுடன் இணைந்து ஹனுமன் கீர்த்தனைகளை படித்தார். தேவேந்திர பட்னானவிஸ் பேசுகையில் கூறியதாவது: நாங்கள் ஹனுமன் கீர்த்தனைகளை படித்தோம். 

பால் தாக்கரே

பாலா சாகேஷ் தாக்கரே தனது மகனின் ஆட்சிக் காலத்தில் ஹனுமன் கீர்த்தனைகளை படிப்பது தேசத் துரோகமாக இருக்கும் என்றும், அவுரங்கசீப்பின் கல்லறைக்கு செல்வது அரச நெறிமுறயை என்றும் எப்போதாவது நினைத்திருப்பாரா?. அவர்கள் (சிவ சேனா) நேற்று மாஸ்டர் சபா என்று ஒரு கூட்டத்தை நடத்தினர். ஆனால் நாங்கள் அதை கேட்கும்போது, அது ஒரு சிரிப்பு சபையாக இருந்தது. 

தொழிலாளர்கள் மனிதர்கள் இல்லையா?.. உத்தர பிரதேச அரசை சாடிய அசாதுதீன் ஓவைசி

நேற்று கௌரவ சபை (சிவ சேனா கூட்டம்), இன்று இது பாண்டவர் சபை (பா.ஜ.க.வின் மகாசங்கல்ப் சபா). அசாதுதீன் ஓவைசி அவுரங்கசீப்பின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார். அதை நீங்கள் தொடர்ந்து பார்க்கிறீர்கள். நீங்கள் அதற்கு வெட்கப்பட வேண்டும். ஓவைசி நான் சொல்வதை கேளுங்கள், அவுரங்கசீப்பின் அடையாளத்தை கண்டு நாய் கூட சிறுநீர் கழிக்காது. இந்துஸ்தானில் காவி ஆட்சி செய்யும்.