என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்க மாட்டேன், அரசியலில் எல்லாவற்றையும் மனதில் கொள்ள முடியாது.. பட்னாவிஸ்

 
வெள்ளிக்கிழமைக்குள் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்! சிவ சேனாவுக்கு அல்வா கொடுத்த பா.ஜ.க.

என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்க மாட்டேன். நான் அவர்களை மன்னிக்கிறேன், அரசியலில் எல்லாவற்றையும் மனதில் கொள்ள முடியாது என்று மகாரஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
 
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசுகையில், நான் மீண்டும் வருவேன் என்று ஒரு முறை கூறியிருந்தேன். ஆனால் நான் அப்படி சொன்னதும் பலர் என்னை கேலி செய்தார்கள். நான் இன்று திரும்பி வந்து என்னுடன் அவரை (ஏக்நாத் ஷிண்டே) அழைத்து வந்துள்ளேன். 

ஏக்நாத் ஷிண்டே

என்னை கேலி செய்தவர்களை நான் பழிவாங்க மாட்டேன். நான் அவர்களை மன்னிக்கிறேன், அரசியலில் எல்லாவற்றையும் மனதில் கொள்ள முடியாது. அரசியலில் எதிரிகளின் குரலை கேட்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அறிக்கைகள் மற்றும் பதிவிட்டதற்காக மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதை பார்த்தோம். 

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

நமக்கு எதிராக பேசுபவர்களுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். விமர்சனங்களுக்கு நாம் சரியான முறையில் பதிலளிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் தலைமை பற்றாக்குறை காணப்பட்டது. ஆனால் மக்களுக்காக எப்போதும் இருக்கும் இரண்டு தலைவர்கள் (ஏக்நாத் ஷிண்டே மற்றும்  தேவேந்திர பட்னாவிஸ்) அவையில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.