ஹனுமன் கீர்த்தனைகளை எங்கே படிக்க வேண்டும்? பாகிஸ்தானிலா? மகாராஷ்டிரா அரசுக்கு பா.ஜ.க. கேள்வி

 
சிவ சேனா வளையல்கள் அணிந்து இருக்கலாம்…. ஆனால் நாங்கள் இல்லை…. தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி….

ஹனுமன் கீர்த்தனைகளை எங்கே படிக்க வேண்டும்? பாகிஸ்தானிலா? என முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசிடம் பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.

அமராவதி மக்களை தொகுதி உறுப்பினர் நவ்னீத் ரானாவும், அவருடைய கணவரும், சுயேட்சை எம்.எல்.ஏ.வுமான ரவி ரானாவும், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டின் முன்பு ஹனுமன் கீர்த்தனைகள் படிக்க போவதாக தெரிவித்தனர். ஆனால் பின்னர் அதனை வாபஸ் பெற்றனர். இருப்பினும் ரானா தம்பதியனர் மீது மும்பை போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் தற்போது ரானா தம்பதியினர் நீதிமன்ற காவலில் உள்ளனர். இந்த விவகாரத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா அரசை பா.ஜ.க. கடுமையாக தாக்கியுள்ளது.

 ரவி ரானா மற்றும் நவ்னீத் ரானா

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு சகிப்புத்தன்மையற்றது. ரானா தம்பதியினர் ஹனுமன் கீர்த்தனைகளை படிக்க வேண்டும் என்றுதான் சொன்னார்கள். அவர்கள் (ரானா தம்பதி) முதல்வர் வீட்டின் போராட்டம் நடத்துவோம் என்றோ அல்லது வேறு எதுவும் சொல்லவில்லை. 

உத்தவ் தாக்கரே

ஹனுமன் கீர்த்தனைகளை எங்கே படிக்க வேண்டும்? பாகிஸ்தானிலா? ஹனுமன் கீர்த்தனைகள் படிப்பது தேசவிரோதமா? அப்படியானால் நாங்களும் ஹனுமன் கீர்த்தனைகளை ஓதுவோம். அரசு எங்கள் மீது தேச துரோக வழக்கு போட வேண்டும். ஒரு பெண் எம்.பி. (நவ்னீத் கவுர் ரானா) சிறையில் தவறாக நடத்தப்பட்டார். அவளது சாதி குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டது. நவ்னீத் கவுர் ரானாவுக்கு தண்ணீர் கொடுக்கப்படவில்லை, கழிவறையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.