சில பா.ஜ.க. தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் செய்தி தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர்... உத்தவ் தாக்கரே

 
காடுகள் மற்றும்  வனவிலங்குகள் பிரியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர்  உத்தவ் தாக்கரே தரும் ஒரு  மகிழ்ச்சியான செய்தி!

[12:44, 3/26/2022] Gps: சில பா.ஜ.க. தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் ஏஜெண்ட்களாக அல்லது செய்தி தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் ஆளும் கட்சியினருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினரை மத்திய பா.ஜ.க. அரசு ஏவி வருவதாக சிவ சேனா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த சூழ்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பணமோசடி தொடர்பான வழக்கில், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனர் ஸ்ரீதர் மாதவ் படங்கருக்கு சொந்தமான நிறுவனத்தின் ரூ.6.45 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. 

அமலாக்கத்துறை

இது முதல்வர் உத்தவ் தாக்கரேவின் கோபத்தை கிளறியுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவையில், முதல்வர் உத்தவ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு எமர்ஜென்சியை அறிவிக்கும் தைரியம் இருந்தது. அதேவேளையில் பா.ஜ.க. ஒரு அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் முன்னிலையில் நான் உங்களிடம் (பா.ஜ.க.) சொல்கிறேன்.

பா.ஜ.க.

உங்களுக்கு அதிகாரம் வேண்டும், சரியா? நான் உங்களுடன் செல்வேன் என்று சொல்கிறேன். அதிகாரத்திற்காக அல்ல.  நீங்கள் இப்போது செய்து வரும் செயல்கள், என் குடும்ப உறுப்பினர்களை அவதூறு செய்வது, அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற செயல்களுக்கு நான் பயப்படவில்லை. நான் உங்களுடன் வருகிறேன். என்னை சிறையில் அடையுங்க. சில பா.ஜ.க. தலைவர்கள் மத்திய புலனாய்வு அமைப்புகளின் ஏஜெண்ட்களாக அல்லது செய்தி தொடர்பாளர்களாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.