நான் உயிருடன் இருக்கும் வரை டெல்லியில் மின்சாரம் இலவசம்தான்.... முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

 
டெல்லியில் பேருந்துகளில் பெண்களுக்கு  இலவச பயணம்….. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

நான் உயிருடன் இருக்கும் வரை டெல்லியில் மின்சாரம் இலவசம்தான் என்று டெல்லி  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதியாக தெரிவித்தார்.

டெல்லி மாநகராட்சிக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடைபெற உள்ளது. மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு ஆதரவாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்து வருகிறார். டெல்லியின் பஹர்கஞ்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்கையில் கூறியதாவது: மாநகராட்சி தேர்தலில் அவர்கள் (பா.ஜ.க.) வெற்றி பெற்றால், நகரின் அனைத்து வளர்ச்சி பணிகளையும் நிறுத்துவார்கள்.

பா.ஜ.க.

இலவச மின்சாரத்தை ஏன் இலவசம் என்று சொல்கிறார்கள்?.டெல்லியில் இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் கெஜ்ரிவால் உயிருடன் இருக்கும் வரை டெல்லியில் மின் சப்ளை இலவசம்தான். ஆம்  ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். மின்சாரம் மற்றும் தண்ணீர் இலவசமாக வழங்குவது போல், குப்பை பிரச்சினையையும் சமாளிப்போம். ஆம் ஆத்மி கட்சி மாநகராட்சியில்  உள்ள 250 இடங்களில் 230 இடங்களை வெற்றி பெற வேண்டும்.

மின்சாரம்

இதனால் ஆம் ஆத்மி கட்சி மாநில அளவிலும், உள்ளாட்சி அமைப்பிலும் ஆட்சியில் இருக்கும். பா.ஜ.க.  வெற்றி பெற்றால் அனைத்து வளர்ச்சி பணிகளும் நின்று விடும். இப்போது செய்வது போல்  தினமும் எங்களுடன் சண்டையிடுவார்கள். ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களிலும் ஆட்சியில் இருக்க வேண்டும். பணிகள் நடைபெறுவதை கெஜ்ரிவால் மட்டுமே உறுதி செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.