முதல்வர் ஹேமந்த் சோரன் ஒட்டுமொத்த ஜார்கண்டிலும் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டார்... பா.ஜ.க. குற்றச்சாட்டு

 
ஆயிரக்கணக்கான மக்கள் மீது முந்தைய பா.ஜ.க. அரசு போட்ட வழக்குகள் வாபஸ்! முதல் நாளிலேயே முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடி…

முதல்வர் ஹேமந்த் சோரன் ஒட்டுமொத்த ஜார்கண்டிலும் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.

ஜார்க்கண்டில் சட்டவிரோத சுரங்க வழக்கு தொடர்பான விசாரணைக்காக ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் நேற்று ஆஜரானார். அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஹேமந்த் சோரன் ஜார்க்கண்டில் ஊழலின் அடையாளமாக மாறி விட்டார் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் பா.ஜ.க. தலைவர் தீபக் பிரகாஷ் கூறியதாவது: ஹேமந்த் சோரன் ஒட்டுமொத்த ஜார்கண்டிலும் ஊழலின் அடையாளமாக மாறிவிட்டார். 

அமலாக்கத்துறை

ஊழலின் இருண்ட செயல்கள் முழு அரசாங்கத்திலும் நிலவி வருவதை நீங்கள் ஒவ்வொரு நாளும் பார்க்க முடியும். நீங்கள் சுட்டிக்காட்டும் எந்த துறையும் ஊழலின் வெளிச்சத்தில் பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தால், நீங்கள் செல்ல வேண்டும், ஏனென்றால் அவர்களது கூட்டாளிகள் அனைவரும் சிறைக்குள் இருக்கிறார்கள், இயற்கையாகவே இது போன்ற பல ஆதாரங்கள் விசாரணையின் அடிப்படையில் கிடைத்திருக்கும். அதனால்தான் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதில் பல அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர், எனவே அவர்களும் மூத்த அதிகாரிகளுடன் விசாரிக்கப்பட வேண்டும். இது ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேலான விஷயம். 

தீபக் பிரகாஷ்

சட்டவிரோத சுரங்க கொள்ளையின் பாதுகாவலர் ஒருவர் இருக்கிறார், அதுதான் ஹேமந்த் சோரன் மற்றும் அவரது குடும்பத்தினர். தற்போதைய ஜார்க்கண்ட் அரசு முதல்வரின் உத்தரவின் போில்,இயங்கை வளங்களை சூறையாக அனுமதித்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. முதல்வரை விசாரணைக்கு அழைத்தால் அவர் செய்வது எல்லாம் அரசியல் நாடகம். என்னைப் பொறுத்தவரை சட்டத்தின் பாதுகாவலர் ஜார்க்கண்டிலும் சட்டத்தை அழிப்பவராக மாறி விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.