முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல்: பக்கத்து நாட்டினருக்கு தொடர்பா?
முதல்வர் ஏகநாத் ஷிண்டேவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதை அடுத்து இயக்குநர் ஏக்நாத் ஷிண்டேவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. முதல்வருக்கு வந்த இந்த மிரட்டலில் பக்கத்து நாட்டினர் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் உள்துறை விசாரணை நடத்த இருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக உள்ளார் ஏக்நாத் ஷிண்டே. போட்டி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே. கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் உள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை கொலை செய்யப் போவதாக தொலைபேசி மூலமாக மிரட்டல் வந்துள்ளது. இதன் பின்னர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அதிகாரப்பூர்வ இல்லமான மலபார் ஹில்ஸ், தனிப்பட்ட இல்லமான வர்ஷாவிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது .
இதற்கிடையில் தொலைபேசியில் மிரட்டியவர் யார் என்பது குறித்தும் , எங்கிருந்து மிரட்டல் எடுக்கப்பட்டது என்பது குறித்தும் கண்டறிவதற்காக மாநிலத்தின் உள்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்தில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுக் கொண்டது முதல் சில முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அந்த முடிவுகளால் சிலர் வருத்தப்படலாம். அதே நேரம் இந்த மிரட்டலில் ஏதேனும் அரசியல் இருக்கிறதா? இல்லை, பக்கத்து நாட்டினர் ஈடுபட்டுள்ளனரா? என்பது பற்றியும் உள்துறை விசாரணை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.