தலித் சர்ச்சை! யோகியை சந்திக்கிறார் தினேஷ் கத்திக்

 
y

தலித் என்பதால் தன்னை உயரதிகாரிகள் மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்  உபி ஜல்சக்தி அமைச்சர் தினேஷ் காத்திக்.  இது உபி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது.  இந்த நிலையில் இன்று மாலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்திக்க இருக்கிறார் தினேஷ் கத்திக் என்று தகவல் பரவுகிறது.

 உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் தினேஷ் கத்திக்.  இவர் தனது துறையில் இருக்கும் ஊழலை சுட்டிக்காட்டியும் தான் தலித் என்பதால் உயர் அதிகாரிகள் தன்னை மதிப்பதில்லை என்று புகார் தெரிவித்தும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசில் ஜல் சக்தி துறை அமைச்சராக இருந்தார் தினேஷ் கத்திக்.  

d

 இவர் திடீரென்று நேற்று தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்வதாக சொல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.   தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.  

அமித்ஷாவுக்கு எழுதிய  ராஜினாமா கடிதத்தில்,   அதிகாரிகள் தனது துறையில் நடத்தும் கூட்டம் ஆலோசனைகள் குறித்து எந்த தகவலும் தனக்கு தெரிவிப்பதில்லை. தன்னை ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிப்பதில்லை.  எந்த தகவலையும் இலாகா சார்ந்த துறை அதிகாரிகள் சொல்வதில்லை.    துறையில் இடம் மாற்றம் போன்ற நடவடிக்கைகளுக்கு  லஞ்சம்,  ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.   தான் ஒரு தலித் அடையாளத்தை கொண்டவன் என்பதாலேயே யாரும் என்னை மதிப்பதில்லை என்று சொல்லி இருக்கிறார் தினேஷ் கத்திக்.

 ராஜினாமா  செய்திருக்கும் நிலையில் நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா,  உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர்களை சந்தித்து இருக்கிறார் .  இந்த நிலையில் இன்று மாலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்தை அவர் சந்திக்க இருக்கிறார் என்று தகவல் வருகிறது.