திமுக ஸ்லீப்பர் செல் அண்ணாமலை.. வார் ரூம் கதறல் எங்கே? காயத்ரி ரகுராம்

 
aஉ


அண்ணாமலைக்கும் காயத்ரி ரகுராமுக்குமான மோதலில் திமுக பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து கட்சியில் இருந்து  ஓரங்கட்டப்பட்டிருந்தார் காயத்ரி ரகுராம். 

க்

 சென்னையில் சோமர் செட் ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் உடன் ஒரு மணி நேரத்திற்கு மேல் சந்தித்து பேசினார் என்று குற்றச்சாட்டை அண்ணாமலை ஆதரவாளர்கள் முன்வைத்திருந்தனர் .  அதேபோல் துபாயில் திமுகவினருடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து நடத்தினார் என்றும்,  திமுகவினருடன்  பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார் என்றும் காயத்ரி ரகுராம் மீது அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து பாஜகவில் இருந்தே விலகி இருக்கிறார் காயத்ரி ரகுராம்.   இந்த நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு இன்று பிறந்தநாள்.   இதை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை,   ‘’எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.  இதை விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம் .

க்ய்

அவர்,   திமுக ஸ்லீப்பர் செல் அண்ணாமலையா? வார் ரூம் கதறல்கள் எங்கே? தி.மு.க.வை சேர்ந்த ஒருவருக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்’’என்று கேட்கிறார்.