’’என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்..’’- அண்ணாமலையை கடுமையாக சாடும் திமுக

 
sa

அமைச்சர் செந்தில் பாலாஜி -தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்கும் இடையே நடக்கும் தொடர் மோதல் குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் முரசொலியில்,  ‘ஒரு கேள்வி ஒரு பதில்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் பதிவு இது.

 கேள்வி:  தமிழ்நாட்டு பாஜக தலைவர் அமைச்சர் செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என பேசி தனது தரம் எப்படிப்பட்டது என்பதை காண்பித்துள்ளாரே பார்த்தீர்களா ? ஏன் அவருக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அத்தனை கோபம் வருகிறது?

 பதில்: வராதா? என்ன முதலமைச்சர் கனவோடு நாக்கை தொங்க போட்டு கொண்டு,  தான் வகித்த உயர் போலீஸ் பதவியை உதறிவிட்டு தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்தார்.  அரவக்குறிச்சி தொகுதியில் ஆசையோடு போட்டியிட்ட அவரை தோல்வியை சந்திக்க வைத்து ஒரு எம்எல்ஏ கூட ஆக முடியாத அளவு துண்டைக் காணோம் துணியை காணோம் என ஓட ஓட விரட்டி அடித்தார் செந்தில் பாலாஜி.

a

 செந்தில் பாலாஜியை தூக்கிப்போட்டு மிதித்து விடுவேன் என அரவக்குறிச்சியில் பேசிய அந்த பேர்வழியை தேர்தல் களத்தில் தூக்கிப்போட்டு செந்தில் பாலாஜி துவைத்து எடுத்ததை தேர்தல் முடிவு அறிவித்தது.   அந்த ஆத்திரத்தில் அறிவு கெட்ட தனமாக பேசிக் கொண்டிருக்கிறார் . 

அந்த காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் கேட்டதில்லையா? அதாவது,   ‘என்னதான் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் சில ஜீவன்கள் வாழைகுழைத்து எதையோ தின்னத்தான் செல்லுமாம்.. அந்த ரகப் பேர்வழியிடம் இதை விட இது போன்ற பேச்சை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.

 கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக அரசு சேகரித்து வரும் ஆதாரங்களை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.   இதனால் அண்ணாமலையிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தி இருக்கிறார்.  இதுகுறித்து செய்தியாளர்கள் அண்ணாமலை இடம் கேள்வி எழுப்ப முயன்ற போது,  எதற்காக குரங்குகள் போல் தாவித்தாவி  வருகிறீர்கள்.. ஊர்ல இருக்கிற நாய் பேய் சாராயம் விக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா? என்று ஆத்திரப்பட்டார். 

இதற்காகத்தான் முரசொலி இந்த பதிவை வெளியிட்டுள்ளது.