தூசு தட்டுகிறது திமுக! அதிமுகவினர் பலர் சிக்குவார்கள்...

 
ட்

கிடப்பில் போடப்பட்டதை தூசு தட்டுகிறது திமுக அரசு.  கஞ்சா,  குட்கா கடத்தல் வழக்குகளில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள் என்கிறார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.

 கடந்த 2016ஆம் ஆண்டில் சென்னை மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் நடந்த வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட டைரியின் அடிப்படையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஜெயபாஸ்கர்,  முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 40க்கு மேற்பட்டோர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது.  

டு

 மாதவராவ் குடோனில் கைப்பற்றப்பட்டிருந்த அந்த டைரியில் இடம்பெற்று இருந்த பெயர்களின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது .  இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ,  அமலாக்கத்துறை இந்த சம்பவங்கள் தொடர்பாக வழங்கும் தொடர்ந்திருந்தது.  ரெய்டில் 246 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கப் பட்டன.

 இந்த வழ இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர்,  பி. வி. ரமணா,  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் டி. கே. ராஜேந்திரன்,  சார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய சிபிஐ முடிவு செய்தது.   மாநில அரசிடம் அனுமதி பெற்று வழக்கு பதிவு செய்ய முடியும்.  அதனால் இந்த விவகாரத்தில் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு சிபிஐ கடிதம் எழுதி இருக்கிறது.

 இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கஞ்சா,  குட்கா கடத்தல் வழக்குகளில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.  
வேலூர் மாவட்ட காட்பாடி பிரம்மபுரத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ,  கஞ்சா- குட்கா அதிக அளவு கடத்தப்பட்ட அதிமுக ஆட்சியில் அது குறித்த வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன.   அதிமுகவினர் பலர் சம்பந்தப்பட்டிருக்கும் இந்த வழக்குகளை திமுக அரசு, சிபிசிஐடி விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்திருக்கிறது.   இந்த வழக்கில் அதிமுகவினர் பலர் சிக்குவார்கள்  என்று தெரிவித்திருக்கிறார்.