திமுக அமைச்சருக்கு எதிராக திமுகவினர் உண்ணாவிரத போராட்டம்

 
ச்ந்

திமுக அமைச்சருக்கு எதிராக திமுகவினரே உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பது திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  உட்கட்சி பூசலால்  அண்ணா அறிவாலயத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   அமைச்சர் சாமிநாதனுக்கு எதிராகத்தான் திமுக தலைவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தை நடத்த இருக்கிறார்கள்.

 திருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் திமுக செயலாளரும் செய்தி துறை அமைச்சருமானவர் சாமிநாதன்.  திருப்பூர் மாவட்டத்தில் ஒன்றிய செயலாளர் தேர்தலில் அமைச்சர் சாமிநாதன் தரப்பு,  இளைஞர் அணியைச் சேர்ந்த கருணை பிரகாஷ் என்பவரை சிதம்பரத்திற்கு எதிராக களம் இறக்கி இருக்கிறது.  ஆனால் சிதம்பரத்திற்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள் .

ஆ

இந்த நிலையில் காங்கேயம் ஒன்றியம் ஊராட்சித் தலைவர் ஈஸ்வரமூர்த்தியின் தலைமையில் திமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் நேற்று ஒரு மனு அளித்திருக்கிறார்கள்.  அந்த மனவில்,   காங்கேயம் வடக்கு ஒன்றியத்தில் பெரும்பான்மையாக கிளைச் செயலாளர் பிரதிநிதிகள் ஆதரிக்கும் சிதம்பரத்தை புறக்கணித்துவிட்டு,  வேண்டுமென்றே நிர்வாகிகளை சந்திக்காமல் காலதாமதம் செய்கிறார் அமைச்சர் சாமிநாதன். 

 இதையும் கண்டித்து காங்கேயம் திமுக அலுவலகம் முன்பாக கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும்.   30ஆம் தேதி இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

 திமுக அமைச்சருக்கு எதிராக திமுகவினரே போராட்டம் களத்தில் இறங்கி இருப்பதால், இந்த உட்கட்சி பூசல்  திமுக தலைமையில் சலசலப்பை ஏற்பட்டு இருக்கிறது.