தமிழ் வசை.. மாட்லாடியது மறந்து போச்சா? மீண்டும் வறுத்தெடுத்த திமுக

 
tச்

தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும் புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தமிழக ஆளுநருக்கும் திமுக அரசுக்கும் இடையே இருக்கும் மோதல் விவகாரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.  இதனால் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடு முரசொலியில் ‘’ஆளுநர்களே எரிமலையோடு விளையாடாதீர்கள்’’என்ற தலைப்பில் தமிழிசை சௌந்தரராஜனை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிடப்பட்டது.  முரசொலையில் வெளிவந்த இந்த கட்டுரைக்கு தமிழிசை பதிலடி கொடுத்திருந்தார். எரிமலை இமயங்களை ஒன்றும் செய்து விட முடியாது.  மூட்டை பூச்சிகளை சாயம் வெளுக்கிறது என பயமா என்று கேட்டு இருந்தார்.  அதோடு திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

ட்

சீரியலிலும், சினிமாவிலும் நடித்துவிட்டு பதவியில் அமர்ந்திருப்பவர்களுக்கு கேமரா மேனியா? மைக் மேனியாவா? இல்லை எங்களுக்கா? உண்மையை உரக்கச் சொல்லும் எங்களுக்கு மைக் மேனியாவும் இல்லை கேமரா மேனியாவும் இல்லை. எங்களுக்கு மைக் மேனியா என்பதைவிட உங்களுக்குத்தான் மோடி போபியா (மோடி பயம் ) எனவே இந்த பயத்தில் குளிர் ஜுரம் வந்து அடிக்கடி என்னைப்பற்றி கட்டுரை வருகிறது.

தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பதை ஒழுங்காக முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள். தெலுங்கை பூர்வீகமாகக் கொண்டு வீட்டில் தெலுங்கு பேசி தமிழ் வேஷமிடும் தெலுங்கர்களுக்கு தெலுங்கானாவின் ஆளுநராக இருந்தாலும் தெலுங்கானா சட்டமன்றத்தில் திருக்குறளை தமிழில் ஒலிக்கச் செய்த முழுமையான தமிழ் ரத்தம் ஓடும் தமிழச்சி நான் என்பதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை. என்னை யார் தமிழகத்தில் கருத்து கூற முடியாது என்று சொல்வது... யார் அந்நியர் நீங்களா? நானா? என்று கடுமையாக சாடினார்.

இதற்கு  முரசொலி நாளிதழில் பதிலடி கட்டுரை வெளியிடப்பட்டிருக்கிறது.

’’தெலுங்கானா ஆளுநர், புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை இன்னும் பல உயரங்களை அடைய விரும்புகிறார். அடையட்டும்.  தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என்று நினைக்கலாம் அல்லது நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு ஒன்றிய அமைச்சராகலாம் என்று நினைக்கலாம்.  அவரது ஆசை அதில் பேராசையாகவும் நிராசையாகவும் அவரது எச்சத்தால் காணப்படும்.  ஆனால் திமுகவை வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தையும் இழிவு படுத்துவதன் மூலமாக பெயர் அடைய தமிழிசை நினைப்பதுதான் அருவருப்பானது .

ட்

தமிழ் இலக்கியம் படித்த தமிழிசையை தரங்கெட்ட அளவுக்கு தரை மட்டத்துக்கு அவரது அரசியல் மோகம் பாழ்படுத்தி விட்டது என்பதை அவரது பேச்சுக்கள் மூலமாக தெரிகிறது வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு தமிழ் வேடம் போடுகிறது என்று தலைவர் குடும்பத்தை மறைமுகமாக தமிழ் வசை பாடி இருக்கிறார்.

 யார் தெலுங்கு பேசுகிறார்கள் என்று அவரால் நிரூபிக்க முடியுமா?  நான் விரைவில் தெலுங்கில் பேசுவேன் என்று தெலுங்கானாவில் ஆளுநராக பதவி ஏற்கும் போது மாட்டலாடியது மறந்து போச்சா? 

 தமிழிசை திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியவர் தமிழின தலைவர் கலைஞர்.  தமிழிலா தெலுங்கிலா வாழ்த்தினார் கலைஞர்.  கலித்தொகை பாட்டில் ஆண்மான் பெண் மான் கதையைச் சொன்னாரே கலைஞ. ர் ஆனால் ஒரு காலத்தில் தமிழிசை பொய்மான் ஆவார் என்று பாவம் கலைஞர் நினைக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

 ஆகஸ்ட் 19ஆம் தேதி கோபாலபுரம் கலைஞர் இல்லத்துக்கு முன்பு உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்திருந்தார் தமிழிசை. அரை நூற்றாண்டு கால தமிழகத்தின் தமிழரின் தமிழினத்தின் தாய் விடாமல் கலைஞர் இல்லத்துக்குள் வந்தார் .  செல்வி தமிழிசையை அன்போடு அழைத்துச் சென்றார்.  தெலுங்கிலா வரவேற்றார் .  

க்ச்

உள்ளத்தால் பொய் சொல்லி வாழ்ந்தால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை எத்தனையோ தமிழ் பாட்டுகள் சொல்லி இருக்கிறது.   கலைஞர் மறைவு பெற்ற போது மாலை அணிவித்து விட்டு மலர் அஞ்சலி செலுத்தி விட்டு,    ’வானமே மங்கி இருக்கிறது ஏனென்றால் ஒரு தமிழ் சூரியன் மறைந்து இருக்கிறது’ என்று சொன்ன தமிழிசை,  இன்று தமிழ் வசதியாக ஆனது.   எதற்காக பாஜக தலைமை அவருக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறது.

 தெலுங்கானா ஆளுநர் கூடுதலாக புதுவை துணைநிலை ஆளுநர் அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் மாநில அரசுகளின் மாண்புகளுக்கும் கட்டுப்பட்டு அவர் தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் .  தெலுங்கானாவில் அவருக்கும் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு பிரச்சனை இருக்கலாம் .  அதனால் அங்கு அவருக்கு இருக்க முடியாமல் போகலாம்.    புதுவையை தனது தகுதிக்கு சிறிய மாநிலமாக நினைக்கலாம். அதனால் அங்கும் இருக்க பிடிக்காமல் இருக்கலாம் . அவை பிடிக்கவில்லை என்றால் பதவி விலகி விட்டு தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் நடத்தலாம்.

 அதை விட்டுவிட்டு வேற்று மாநில  ஆளுநராக இருந்து கொண்டு இங்கு அரசியல் நடத்தக்கூடாது.  இது அவர் வகிக்கும் பதவிக்குரிய பணிகள் அல்ல.  தமிழ் தெலுங்கானா புதுவை மாநிலத்தின் சுருக்கெழுத்தாளர் இங்கு வந்து தலையை உடைப்பேன் என்பது ஏற்ற பொறுப்புக்கு ஏற்றது அல்ல.   தமிழக ஆளுநராக இருக்கும் வி தனது நிர்வாக வரம்புகளை மீறி அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தும் கருத்துக்களை சொல்லி வருகிறார்.  இதற்கு திமுகவும் முரசொலியும் வலுவான விளக்கத்தைச் சொல்லி வருகிறது.  இதற்குள் எதற்காக தமிழிசை தலையை நுழைக்க வேண்டும்’’ என்று கேள்வியை  எழுப்பி இருக்கிறது.