நடு இரவில் அமித்ஷாவைச் சந்தித்த திமுக குடும்ப வாரிசு

 
அட்

 திமுக குடும்ப வாரிசு சிபாரிசு ஒருவர் நடு இரவில் அமித்ஷாவை சந்தித்து பேசியுள்ளார்.   இந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா ஆவடியில் தங்கினார் என்று தகவல் பரவுகிறது.  

 மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அண்மையில் வந்திருந்தார்.  அவர் முதல்நாள் இரவு சென்னை விமான நிலையம் வந்து ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.    மறுநாள் காலையில்தான் ஹெலிகாப்டர் மூலமாக புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

அம்ட்

 வழக்கமாக மத்திய அமைச்சர்கள் ஆளுநர் மாளிகையில் தங்குவார்கள்.   அல்லது விருந்தினர் இல்லத்தில் தான் தங்குவார்கள்.   அமித் ஷாவுக்கும் ஆளுநர் மாளிகையில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   ஆனால் அவர் அங்கு தங்காமல் ஆவடியில் இருக்கும் சிஆர்பிஎஃப் விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்கியது ஏன் என்ற சலசலப்பு எழுந்தது.

 இதற்கு,   நடுஇரவில் அமித்ஷாவை சந்திக்க ஒரு முக்கிய பிரமுகர் வந்தார்.   அவர் திமுக குடும்ப வாரிசின் சிபாரிசு மூலமாக வந்தார்.   இந்த சந்திப்பு ரகசியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமித்ஷா ஆவடிக்கு சென்று சிஆர்பிஎப் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.  அங்கு தமிழக போலீசார் உள்ளே வரமுடியாது.   அங்கு யாரை சந்தித்தாலும் வெளியே தெரியாது.  இதற்காகவே ஆவடியில் உள்ள சிஆர்பிஎஃப் மாளிகையில் சென்று  அமித்ஷா தங்கினார் என்று டெல்லி  வட்டாரத்தில் இருந்து தகவல் கசிகிறது. 

 திமுக குடும்ப வாரிசு சிபாரிசின் அடிப்படையில் நடு இரவில்  சென்று சந்தித்தது அரசியல் காரணமா? அல்லது சொந்த விஷயமா? என்று தெரியவில்லை.  
எப்படி இருந்தாலும் குடும்ப வாரிசின் இந்தச் செயல் ஸ்டாலினுக்கு எரிச்சலை ஏற்படுத்தாமல் இருக்குமா என்ன? என்று பேசிக்கொள்கிறார்கள்.