திமுக கோழைகள் வன்முறை வெறியாட்டம்! அஞ்சும் திமுகவின் படபடப்பை வெளிப்படுத்துகிறது - பாஜக கடும் கண்டனம்

 
ann

திமுக அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  இதனால்  திமுக அமைச்சர்கள் கொதித்து எழுந்து அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.  அமைச்சர் கீதாஜீவன்,  இனி அண்ணாமலை எங்களைப் பற்றி பேசினால் அதே மேடையில் நாங்கள் ஏறி விடுவோம்.  மேடை ஏற வேண்டியது இருக்கும் என்று எச்சரித்து இருந்தார். 

அதாவது,  அண்ணாமலை மேடை ஏறி தாக்குவோம் பேசவிடாமல் செய்து விடுவோம் என்கிற விதத்தில் அவர் எச்சரித்து இருந்தார்.   இதற்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில்,  கடந்த 21ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் நடந்த கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் முன்னாள் எம். பி.யும்,  பாஜக மாநில துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா பேசிய போது,  உங்களைப்போல் சொத்து குவிப்பு வழக்கில் சிக்கி அண்ணாமலை கோர்ட் வாசலில் நிற்கவில்லை.  அவரைப் பற்றி தரைக்குறைவாக பேசினால் கீதா ஜீவன் நாக்கை விட்டுவோம் வீட்டை விட்டு வெளியே வர முடியாத படி கால்களை விட்டுவோம் என்று ட எச்சரித்து இருந்தார்.

sa

அமைச்சர் கீதா ஜீவனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்லி சசிகலா புஷ்பாவை கைது செய்யக்கோரி திமுகவினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தூத்துக்குடி தபால் தந்தி காலனி எட்டாவது தெருவில் இருக்கும் சசிகலா புஷ்பாவின் வீட்டில் முன்பாக நிறுத்தி வைத்து இருந்த கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துள்ளனர்.  பாஜக ஆதரவாளர்கள் போலீசார் உடன் வாக்குவாதத்தில் இதனால் ஈடுபட்டிருக்கிறார்கள் . இந்த தாக்குதல் நடத்திய சம்பவத்தில் சசிகலா புஷ்பா கன்னியாகுமரியில் நிகழ்ச்சியில் இருந்து இருக்கிறார். 

 இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாஜகவை தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’’பாஜகவின் மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா  அவர்களின் இல்லம் மற்றும் வாகனத்தின் மீது கொடும் தாக்குதலை திமுகவினர் நடத்தியிருப்பது தமிழகத்தில் காட்டாட்சி நடப்பதை உறுதி செய்கிறது’’என்கிறார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி. 

n

அவர் மேலும்,  ‘’தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதான தமிழக அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்களையடுத்து தற்போது தூத்துக்குடியில்  திமுக கோழைகள் வன்முறை வெறியாட்டம் நடத்தியிருப்பது, பாஜகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சும் திமுகவின் படபடப்பை வெளிப்படுத்துகிறது. இந்த உருட்டல், மிரட்டல்களுக்கெல்லாம் பாஜக அஞ்சாது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்ந்து சீர்கெட்டு வருகிறது என்பதற்கு மிக சிறந்த உதாரணம் இன்றைய தாக்குதல். சட்டம் ஒழுங்கை பேணி காக்க முடியாத அரசு இருந்தும் என்ன பயன்?’’ என்று கேட்கிறார்.