பொதுமக்கள் நம்மை அடித்து விரட்டப்போகிறார்கள்.. திமுக கவுன்சிலரின் ஆடியோ பரபரப்பு

 
au

ஒரு நாள் பொதுமக்கள் நம்மை அடித்து விரட்டக்கூடிய நிலைமை வரப்போகிறது.  அடித்து விரட்டத் தான் போகிறார்கள் என்று நம்பி இருக்கும் திமுக கவுன்சிலரின் ஆடியோ திருச்செந்தூர் நகராட்சி மக்களிடையே வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.    கட்சியினரிடையே இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

 தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன.   இந்த 27 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.   குடிநீர் தட்டுப்பாட்டினால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.   இதனால் இந்த நிலையில் மூணாவது வார்டு திமுக கவுன்சிலர் ரூபன் என்பவர் என்பவர் வெளியிட்டிருக்கும் வாட்ஸ் அப் ஆடியோ ஒன்று  திருச்செந்தூர் பகுதியில் வைரல் ஆகி வருகிறது.

all

 நம்மை பொதுமக்கள் அடித்து விரட்ட கூடிய நிலைமை வரப்போகிறது என்று திமுக கவுன்சிலர் அந்த ஆடியோவில் இது என்ன நிர்வாக சீர்கேடா? இல்லை கடவுளோட சோதனையா? இல்லை திமுக கவுன்சிலர் ஆகிய நாம் வந்த தரித்திரமா? எப்படி இப்படி குடிநீர் தட்டுப் பாடு உண்டானது.  அனைத்து பொதுமக்களும் தங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என்று திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.  

 நம்மால் குடிநீர் கொடுக்க முடியவில்லை.   நகராட்சி நிர்வாகம் குடிநீருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.  புது நகராட்சி கட்டிடம், பொது மார்க்கெட் கட்டிடம் போன்றவற்றிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் .   தண்ணீருக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள்.  இல்லை என்றால் ஒரு நாள் நம்மை பொதுமக்கள் அடித்து விரட்டக்கூடிய நிலைமை வரும்.  அடித்து விரட்டுவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.

 திமுக கவுன்சிலரின் இந்த ஆடியோ திருச்செந்தூர் நகராட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.   அதே நேரம் திமுகவினரிடையே இது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.