போற இடம் எல்லாம் பாட்டில் கேக்குறியாமே?- காயத்ரி மீது சூர்யா சிவா விளாசல்

 
g

 வரும் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ்நாடு முழுவதும் செல்லும் பாதயாத்திரையை தொடங்குகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.  117 நாட்கள் இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொள்ள இருக்கிறார்.  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இந்த பயணத்தை தொடங்குகிறார்.  தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தேர்தல் தொகுதியிலும் அவர் பாதயாத்திரை மேற்கொண்டு,  117 நாட்களில் தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை வலுப்ப படுத்துவது,  தேர்தல் நிதி திரட்டுவது உள்ளிட்ட முக்கிய பணிகளை செய்ய இருக்கிறார் திருவண்ணாமலை.

அ

இதற்கு போட்டியாக பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி,  பாதிக்கப்பட்ட பெண்களுக்காக சக்தி யாத்திரை என்று ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதிலும் பாதயாத்திரை செல்வதாக அறிவித்திருக்கிறார்.

ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு சொந்த பணத்தை செலவிட மாட்ட.  ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்ட தலைவர்களும் 15 முதல் 25 லட்சம் வரை வசூல் செய்ய உத்தரவிட்டீர்கள் . ஆனால் டெல்லியிலிருந்தும் தனியாக வசூல் செய்கிறீர்கள். இது ஊழலுக்கு எதிரான யாத்திரை போல் தெரியவில்லை. அலிபாபா 48 திருடர்கள் சொந்தக் கட்சி தொடங்குவது போல் தெரிகிறது.  உங்களுக்கு நடக்க 16 கோடி கட்சியினரின் பணம் தேவையா? என்று கேட்கிறார் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம்.

க்க்

இதற்கு,  பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று,  யாத்திரை நடத்துறேன்னு சொல்லிட்டு ஊர் ஊரா ஓசியில் ரூம் போட்டு கொடுங்கள் என்று கேட்டியாமே யாரும் போட முடியாதுன்னு சொன்னதுனால தான் நடை பயணத்தை தள்ளி வச்சிட்டியாமே.  ரூம்கே வழியில்ல.   இதுல போற இடம் எல்லாம் பாட்டில் வேற கேக்குறியாமே? என்று பதிலடி  கொடுத்திருக்கிறார் அண்ணாமலை ஆதரவாளர் திருச்சி சூர்யா சிவா.