அமைச்சரை தொடர்ந்து திமுக எம்பி -வைரலாகும் 'நாற்காலி' வீடியோ

 
d

 தான் உட்கார அவசரமாக நாற்காலி எடுத்து வராததால் கட்சி தொண்டர்கள் மீது ஆவேசமாக கல்லை விட்டு எறிந்தார் அமைச்சர் நாசர் . சொந்தக் கட்சியினர் மீது அதுவும் அமைச்சராக இருக்கின்ற ஒருவர் இப்படி அநாகரிகமாக  நடந்து கொள்கிறாரே என்ற சர்ச்சை ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க , தனக்கு முறையாக நாற்காலி ஒதுக்காததால் குடியரசு தின விழாவை புறக்கணித்துவிட்டு தேசியக்கொடி ஏற்றுவதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றிருக்கிறார் திமுக எம். பி. அப்துல்லா.

 73 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி  தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  மாவட்டம் தோறும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருகின்றது .  


புதுக்கோட்டையில் நடந்த குடியரசு தின விழாவை திமுக எம்பி எம். எம் அப்துல்லா புறக்கணித்து இருக்கிறார்.  தனக்கு முறையான நாற்காலி ஒதுக்காததால் விழாவை அவர்  புறக்கணித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.  அந்த விழாவில் திமுக எம்பி எம் .எம். அப்துல்லா தனக்கு முறையாக நாற்காலி ஒதுக்கப்படாததால் தேசிய கொடி ஏற்றுவதற்கு முன்பாகவே வெளியேறி இருக்கிறார். 

 ஆனால் திமுக எம்பி அப்துல்லாவு,   வேறொரு முக்கியமான பணி இருப்பதால் அவசரமாக புறப்பட்டு விட்டேன் என்று விளக்கம் அளித்து இருக்கிறார்.   இதனால் பலர் நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.    

விழாவை பாதையில் புறக்கணித்துவிட்டு வெளியேறும் வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இதை பார்த்த நெட்டிசன்கள் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்துவது விட திமுக எம்பி க்கு அப்படி என்ன முக்கியமான வேலை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.   தேசிய கொடியை அவமதித்துவிட்டார் என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.