திமுக எம்பியின் அடாவடி! பூமி பூஜை பொருட்களை காலால் உதைத்ததால் திமுகவினரே ஆவேசம்

 
sஎ

 பூமி பூஜை பொருட்களை தூர வீசி எறிந்து பூமி பூஜை செய்ய வந்த நபர்களை, அதிகாரிகளை துரத்தி அடித்து முன்னர் சர்ச்சையில் சிக்கினார் திமுக தர்மபுரி எம்பி செந்தில்குமார்.  இப்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.   பூமி பூஜை பொருட்களை காலால் எட்டி உதைத்ததால் திமுகவினரே அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.  சொந்தக் கட்சியினரே சொந்தக் கட்சி எம்பியை  ஆவேசத்துடன் திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.

செர்

 தர்மபுரி மாவட்டத்தில் அதியமான் கோட்டையில் புதிய நூலகம் அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.   நூலகம் அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   நிகழ்ச்சிக்கு வந்த திமுக எம்பி செந்தில்குமார் பூஜைக்காக வைத்திருந்த கற்களை காலால் உதைத்து இருக்கிறார்.  இதைப் பார்த்து ஆத்திரம் அடைந்த திமுகவினர் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் சிறிது நேரம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.  இனிமேல் இதுபோன்ற விழாவுக்கு செந்தில் குமார் எம்பி வரக்கூடாது என்று அங்கு கூடியிருந்த திமுகவினர் முழக்கம் எழுப்பினர்.  திமுக கொடியை அவர் காரில் கட்டாதது பற்றியும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

 இந்த சம்பவத்தை எடுத்து அங்கிருந்து அவசர அவசரமாக கிளம்பிய செந்தில்குமார்,  ஒவ்வொரு முறையும் இதுபோன்று சொல்வதா என்ன ஆத்திரத்துடன் கேட்டுவிட்டு காரில் ஏறி சென்று விட்டார்.

பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த கற்களை காலால் எட்டி உதைத்தார் செந்தில்குமார் எம்பி.  இது மாதிரி செயல்களில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று ஒன்றிய செயலாளரையும் மிரட்டினார் . இதனால் நாங்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தோம் என்று தெரிவித்துள்ளனர் திமுகவினர். 

 ஆ. ராசாவின் செயலுக்கு எதிராக கண்டனங்கள் ஒரு  புறம் வலுத்து வரும் நிலையில் திமுக எம்பியின் இந்த செயலை சொந்த கட்சியினரே விரும்பவில்லை என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.