‘தலைவர்’ஸ்டாலின் தினத்தில் கூடும் திமுக பொதுக்குழு

 
ம்க்


திமுக பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 28ஆம் தேதி நடத்துவதற்காக  திட்டமிட்டு வருகிறது கட்சி மேலிடம். 

  திமுகவின் செயல் தலைவராக இருந்த  மு. க. ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாவது ஆண்டு துவங்குகிறது. ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று திமுக பொதுக் குழு கூட்டம் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என்று நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.   அதன்படியே பொதுக்குழுவை ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அன்று கூட்ட திட்டமிடப்பட்டு வருகிறது .

ம்ம்

திமுகவில் உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது.  ஒன்றிய , நகர செயலாளர் தேர்தல் நடத்தி முடித்த பின்னர் மாவட்ட செயலாளர் தேர்தல் நடத்தவும்,  மாநில நிர்வாகிகள், தலைவர் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.   இந்த மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையத்தில் புதிய நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்.  ஆனால் இன்னும் உட்கட்சி  தேர்தல் முடியவே இல்லை.

 அடுத்த மாதத்தில் இரண்டாவது வாரம் மாவட்ட செயலாளர் தேர்தல் நடைபெற இருக்கிறது.    இந்த தேர்தல் முடிந்த பின்னர் மாநில நிர்வாகிகள் மற்றும் தலைவர், பொதுச்செயலாளர் ,பொருளாளர் தேர்வு நடைபெற இருக்கிறது.   

அதன்பின்னர் ஆகஸ்ட் 28ஆம் தேதி அன்று திமுக பொதுக்குழுவை கூட்ட  திட்டமிடப்பட்டு வருகிறது.