14 மாதங்களில் ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் செய்த ஒரே கட்சி திமுக - எடப்பாடி குற்றச்சாட்டு

 
e

ஆட்சி பொறுப்பேற்ற 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக தான் என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.   எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும் ஆன எடப்பாடி பழனிச்சாமி ஓமலூர் வழியாக தர்மபுரி சென்றார்.  அவர் ஓமலூர் சட்டசபை தொகுதி சார்பில் தீவட்டி பட்டியில் நடந்த பிரம்மாண்ட வரவேற்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது எடப்பாடி பழனிசாமி பேசும் போது,  சேலம் மாவட்டம் அதிமுகவின்  கோட்டை.   தமிழகத்தில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கலாம்.  ஆனால் சேலம் மாவட்டத்தை பொருத்தவரைக்கும் அதிமுக தான் இன்றைக்கு ஆட்சியில் இருப்பதாக மக்கள் கருதுகின்றார்கள் என்றார்.

ee

தொடர்ந்து பேசிய எடப்பாடி,   ஜெயலலிதாவின் ஆட்சிக்கு  முன்னும் மறைவுக்கு பின்னும் நிகராக நிறைய திட்டங்களை ஓமலூர் பகுதியில் நிறைவேற்றி இருக்கிறோம். அதிகமாக ஏழைகள் வசிக்கும் பகுதியில் அம்மா கிளினிக் ஏற்படுத்தி பொதுமக்களுக்கு  சிகிச்சைக்கி ஏற்பாடு செய்த அரசாங்கம் ஜெ., அரசாங்கம்.  இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் மக்களிடையே அதிக அளவில் வரவேற்பு இருப்பதை நினைத்து அதை மூடி விட்டார்கள் நல்ல திட்டங்களை மூடு விழா நடத்துவதற்குத்தான் இந்த அரசாங்கம் வந்ததே தவிர மக்களுக்கு நன்மை செய்ய வரவில்லை என்று விளாசினார்.

es

இந்த ஆட்சி மக்கள் விரோத ஆட்சி என்றவர்,  திமுகவில் மேலும் வறுத்தெடுத்தார்.  திமுக ... அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.  குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பதவியில் இருக்கிறார்கள்.  இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் வீட்டுக்கு போவது உறுதி என்றார்.

 திமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் குறித்தும் அவர் குற்றம் சாட்டினார்.   ஆட்சி பொறுப்பேற்று 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த ஒரே கட்சி திமுக கட்சி தான் என்றார்.    திமுக மீதான எடப்பாடி பழனிச்சாமியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.