அதிமுகவை முடக்க திமுக -பாஜக மறைமுக ஒப்பந்தமா?

 
as

ஓபிஎஸ் மூலமாக அதிமுகவை அழிக்க நினைக்கிறது திமுக என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  குற்றம் சாட்டி வரும் நிலையில்,  அதிமுகவை அழித்துவிட்டு அந்த இடத்திற்கு வர பாஜக திட்டமிடுகிறது என்று அதிமுகவினர் பலரும் சொல்லி வரும் நிலையில்,  அதிமுகவை முடக்க திமுகவும் -பாஜகவும் மறைமுக ஒப்பந்தம் போட்டு இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமி.

o

போதை தீமை குறித்து முதல்வர் பேசியது பெருமையாக உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அந்த அறிக்கையில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இது போன்ற ஒரு விழிப்புணர்வுடன் கூடிய ஒரு விளக்கத்தை தான் நான் தமிழக முதல்வரிடம் இருந்து எதிர்பார்த்தேன்.  போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகளை இத்தனை விரிவாக, இத்தனை தெளிவாக நம் மாநிலத்தின் முதல்வர் அறிந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார்.

kcp

 அவர் மேலும்,  போதையின் பாதையில் இருந்து தமிழகத்தை முற்றிலுமாக மீட்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் இவ்வாறு பாராட்டிய பேசி இருப்பது குறித்து அதிமுகவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே. சி. பழனிச்சாமி,   ‘’அண்ணாமலை திடீரென ஸ்டாலினை பாராட்ட காரணம் என்ன? அதிமுகவை முடக்க  திமுக- பாஜக மறைமுக ஒப்பந்தமா?’’ என்ற கேள்வி என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.