திமுக -பாஜக கூட்டணி அமைகிறதா? சிவி சண்முகத்திற்கு மனோ தங்கராஜ் பதில்

 
ஒ


திமுக -பாஜக கூட்டணி அமையப் போகிறது . அதனால் திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓடப் போகிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.   திமுக -பாஜக கூட்டணி  என்று விரத்தியில் சிவி சண்முகம் அப்படியே பேசுகிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

ச்வ்

என்.எல்.சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் வழங்கிய மக்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.   நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்று கோரி நெய்வேலி சுரங்கம் முன்பு என்எல்சி நிறுவனத்தை கண்டித்தும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

 இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வு, பால் உயர்வு என்று விலைவாசி உயர்வை கண்டித்தும்,  அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  கடலூரில் அதிமுக மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக எம்பி சி.வி. சண்முகம் முன்னிலை வகித்தார்.

அப்போது அவர் பேசிய போது,  பாஜக அரசு சொல்லுகின்ற பணிகளை எல்லாம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் திமுக செய்து வருகிறது .  வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக -பாஜக கூட்டணி அமையப் போகிறது .  இதனால் திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓட போகிறார்கள் என்று கூறியிருந்தார்.  இதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.  விரக்தியில் பேசுகிறார் சிவி சண்முகம்.  தலைமையும் கொள்கையும் இல்லாமல் அதிமுக தடுமாறி வருவதால் அதிமுகவினர் விரக்தியில்  இருக்கிறார்கள் என்கிறார் மனோ தங்கராஜ்.