நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அதிமுகவுடன் தேமுதிக பேச்சுவார்த்தை

 
அதிமுக தேமுதிக பேச்சுவார்த்தை

தேமுதிக தலைமை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை தனித்துப் போட்டி என அறிவித்துள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி 8 பேரூராட்சிகளில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஒரு சீட்டில் சிக்கல்.! இன்று மீண்டும் அதிமுக-தேமுதிக பேச்சுவார்த்தை.!  - Seithipunal

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. திமுக அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி பல கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு கூட்டணியில் இருந்து விலகி அதன் பிறகு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அதன்படி தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை தனித்துப் போட்டி என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு நகராட்சி 8 பேரூராட்சிகளில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்து அதிமுக நிர்வாகிகளோடு தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து இட ஒதிக்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரோடு புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் அறந்தாங்கி நகராட்சியில் மூன்று இடங்களிலும் கீரமங்கலம் பேரூராட்சியில் 2, அரிமளம் பேரூராட்சி 3, ஆலங்குடி பேரூராட்சியில் 2 உள்ளிட்ட வார்டுகளில்  அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய இடங்களில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக புதுக்கோட்டை மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.