பா.ஜ.க.வினர் உணர்ச்சிகளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.. கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

 
பா.ஜ.க.

பா.ஜ.க.வினர் உணர்ச்சிகளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டினார்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் பா.ஜ.க.வின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க. எம்.பி. நளின் குமார் கட்டீல் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் நளின் குமார் கட்டீல் பேசுகையில் கூறியதாவது: வளர்ச்சியை பற்றி கவலைப்பட வேண்டாம் பா.ஜ.க. அதனை கவனித்துக் கொள்ளும். எனவே நான் உங்களிடம் கேட்கிறேன், சாலைகள் மற்றும் கழிவுநீர் போன்ற சிறிய பிரச்சினைகள் பற்றி பேச வேண்டாம். விதான் சவுதாவுக்குள் வேதவியாசர் கை ஓங்கவில்லை என்று விவாதிக்க வேண்டாம். பிரச்சினையை எழுப்ப நளின்குமாருக்கு உரிமை இல்லை என்று கூறாதீர்கள். நளின் குமார் கட்டீலிடமிருந்து நீங்கள் தங்கத்தை பெற போவதில்லை. 

நளின் குமார் கடீல்

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் லவ் ஜிகாத்தை நிறுத்த விரும்பினால், நமக்கு பா.ஜ.க. தேவை. லவ் ஜிஹாத்தில் இருந்து விடுபட பா.ஜ.க. தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க. எம்.பி. நளின் குமார் கட்டீலின் கருத்தை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: அவர் (நளின் குமார் கட்டீல்) மிக மோசமான பதிலை கொடுத்துள்ளார். அவர்கள் வளர்ச்சியை பார்க்கவில்லை, வெறுப்பை பார்த்து நாட்டை பிளவுப்படுத்துகிறார்கள். அவர்கள் உணர்ச்சிகளை பற்றி மட்டுமே பேசுகிறார்கள்.

டி.கே.சிவகுமார்

வளர்ச்சி குறித்து மக்களிடம் பேசி அவர்களின் வயிறு நிரம்புவதை உறுதி செய்கிறோம். நாங்கள் வேலைவாய்ப்பை உருவாக்க விரும்புகிறோம்,  விலைவாசிகள் பராமரிக்கப்பட வேண்டும். சாதாரண மனிதர்களுக்கு ஒரு அது ஒரு பிரச்சினையாக இருக்கக்கூடாது. மக்களின் அன்றாட வாழ்வு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். நாங்கள் வரும் 11ம் தேதி முதல் கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். மாநிலத்தின் அனைத்து மூலை மூடுக்களுக்கும் பயணிப்போம். சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சந்திப்போம். பா.ஜ.க. செய்த அனைத்தையும் நாங்கள் தெரிவிப்போம். இது பா.ஜ.க.வின் கடைசி நாட்கள். அவர்களின் விளக்கு அணைந்து விடும், எங்களுடையது எரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.