எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட பா.ஜ.க. திட்டம்.. டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு..

 
டி.கே.சிவகுமார்

எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ரூ.30 ஆயிரம் கோடிக்கும் செலவிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டினார்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகாக் தொகுதி பா.ஜ.க சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோலி. கடந்த சில தினங்களுக்கு முன் ரமேஷ் ஜார்கோலி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், எதிர்வரும் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஒரு ஓட்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் என்று கூறியதாக கூறப்படுகிறது. இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், வாக்காளர்களை கவரும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக ரமேஷ் ஜார்கிஹோலி மீது பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புகார் அளித்தனர்.

ரமேஷ் ஜார்கிஹோலி

ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சு குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியதாவது: ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.6 ஆயிரம் செலவழிப்பதாக அவர் கூறியுள்ளார். மாநிலத்தில் 40 சதவீதம் கமிஷன் என்ற பெரிய லஞ்சம் உள்ளது. தேர்தலில் ரூ.10 கோடிக்கும் அதிகமாக சம்பாதிப்பதாக அவர் கூறினார். தேர்தலில் ரூ.25 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு எங்களுக்கு உள்ளது.  பா.ஜ.க. அதை ஏற்றுக் கொண்டது. 

ரமேஷ் ஜார்கிஹோலி

ஆனால் நட்டா அல்லது அமித் ஷா அல்ல கடீல் உள்பட யாரும் ரமேஷ் ஜார்கிஹோலி பேச்சை பெரிதாகக்  கவனிக்கவில்லை, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கர்நாடகாவில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, மாநிலத்தில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் செலவிட பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே 40 சதவீதம் கஷிஷன் மூலம்  பணம் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.