எனக்கு சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை.. அது பா.ஜ.க. வேலை.. டி.கே. சிவகுமார் குற்றச்சாட்டு

 
ஒரு கோடியிலிருந்து 100 கோடி ஆறே வருடத்தில்! டிகே சிவகுமார் மகள் விளக்கம்!

சித்தராமையாவுக்கும் எனக்கும் இடையே கருத்து வேறுபாடு இல்லை, ஆனால் பா.ஜ.க. அது போன்ற தவறான கருத்தை உருவாக்குகிறது என கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் குற்றம் சாட்டினார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும், அந்த கட்சியின் மூத்த தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சித்தராமையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை டி.கே. சிவகுமார் மறுத்ததுடன், இது  போன்ற தவறான கருத்தை பா.ஜ.க. உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டினார். டி.கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது: பா.ஜ.க.வின் இது (காங்கிரஸ் தலைவர்கள் இடையே கருத்து வேறுபாடு என்ற செய்தி) பா.ஜ.க.வின் நல்ல உத்தி. தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று பா.ஜ.க. தெரியும். இவர்களின் (பா.ஜ.க. அரசு) நிர்வாகத்தின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம் அவர்கள்தான். 

சித்தராமையா

எனவே அவர்கள் எங்கள் (சித்தராமையா, டி.கே.சிவகுமார்) வேறுபாடுகளை பற்றிய ஒரு கருத்தை உருவாக்குகிறார்கள். எங்கே வேறுபாடுகள் உள்ளன? எங்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. நாங்கள் அனைவரும் ஒன்று. ஒட்டு மொத்த கட்சியும் ஒன்றுதான். நான் மட்டுமல்ல எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். கட்சியில் மூத்த தலைவர்கள் பலர் உள்ளனர். எனவே காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். முதல்வர் பதவி குறித்து ஊடகவியலாளர்கள் பேசுகின்றனர். இது ஏன் இப்போது வந்தது?. தற்போது முதல்வர் பதவிக்காக காங்கிரசில் உள்கட்சி சண்டை என பா.ஜ.க.வும், ஊடகங்களும் பேசி வருகின்றன. பா.ஜ.க. ஏற்கனவே தனது இடத்தை இழந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது. 

பா.ஜ.க.

நல்ல மற்றும்  பலமான எண்ணிக்கை கிடைத்தால்தான் முதல்வர் வேட்பாளர் முடிவு செய்யப்படும். முதல்வர் யார் என்பதை எனது கட்சியின் தலைமை குழு முடிவு செய்யும். அதை முடிவு செய்வது நானோ அல்லது வேறு யாரோ அல்ல. நாம் அனைவரும் அதை பற்றி கனவு காணலாம். ஆனால் முதலில் அதை வழங்க வேண்டும், பின்னர் அந்த விவகாரத்தை பற்றி விவாதிக்க வேண்டும். துருவமுனைப்பு பற்றி மட்டுமே பேசும் பா.ஜ.க., வளர்ச்சி குறித்து பேசாமல் இருப்பது ஏன்? கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கர்நாடகா காங்கிரஸூக்கு நான் பொறுப்பேற்ற நாளே, கட்சியின் மாநில பிரிவுக்கான பிரச்சாரத்தை தொடங்கினேன். மாநிலத்தில் வலுவான ஆட்சி அமைக்க காங்கிரஸூக்கு மாநில மக்கள் தெளிவான ஆணையை வழங்குவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.