இபிஎஸ்க்கு மண்ணெண்ணெய் மாணிக்கம் வைத்த கட் -அவுட்
ஒற்றைத் தலைமை விவகாரத்தை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. ‘எங்களின் ஒற்றை தலைமையே வருக! வருக! ’என்று மண்ணெண்ணெய் மாணிக்கம் வைத்திருக்கிற கட் அவுட் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் நேற்று சேலம் சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலத்தில் பிரம்மாண்ட வரவேற்று நடந்தது. இன்றைக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் நடைபெறும் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. சேலத்தில் இருக்கும் அவர் சேலத்திலிருந்து ஆரணிக்கு சென்று அங்கிருந்து திருவண்ணாமலை வழியாக செல்ல இருக்கிறார். இதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி பலமாக இருக்கிறது. அவரை வரவேற்று போஸ்டர்கள் பரபரப்பாக ஒட்டப்பட்டிருக்கின்றன.
மண்ணெண்ணெய் மாணிக்கம் என்ற அதிமுக பிரமுகர் ஒருவர், ‘எங்களின் ஒற்றை தலைமையே வருக! வருக! ’என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரிய கட் அவுட் வைத்திருக்கிறார். இந்த ம மாணிக்கம் அதிமுக தொண்டர்தான். அவருக்கு என்று கட்சியில் தனியாக எந்த பொறுப்பும் இல்லை என்று சொல்கிறார்கள். அப்படி இருந்தும் எடப்பாடிக்கு கட் அவுட் வைத்து இன்று அதிமுகவினரால் அறியப்பட்டவர் ஆகி அசத்தி இருக்கிறார். மண்ணெண்ணெய் மாணிக்கம் என்கிற பெயர்தான் எல்லோரையும் சட்டென்று ஈர்த்திருக்கிறது.
ஆரணி பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேகத்தின் போதும், போளூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கவும் எடப்பாடி பழனிச்சாமி வருகை தருவதை அடுத்து எங்களின் ஒற்றை தலைமையே வருக வருக, புரட்சித்தலைவரின் வழியில் கழகம் புரட்சித்தலைவியின் வழியில் கழகம் தற்போது எடப்பாடியின் வழியில் கழகம் என்ற அவசர என்ற வாசகங்களுடன் பதாகைகள், கட் -அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடிக்கு கொடுக்கப்படும் இந்த வரவேற்புகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.