வாட்ஸ் ஆப் குழுக்களில் நடக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ் டீமின் காரசாரமான விவாதம்

 
ந்

எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் காரசாரமான விவாதம் நடத்தி வருகின்றனர்.  மீம்ஸ் யுத்தமும் ஒருபக்கம் நடத்தி வருகின்றனர்.

 ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ .பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு  ஏற்பட்டிருக்கிறது.   இதனால் அதிமுக கட்சியினர் இரண்டாக உடைந்து இருக்கின்றனர்.  ஆதரவாளர்கள் போஸ்டர்கள் ,பேனர்கள் கட் அவுட்டுகள் மூலமாக ஒற்றை தலைமை கோரிக்கையை எழுப்பி வரும் நிலையில்,  சமூக வலைத்தளங்களிலும் இந்த விவகாரத்தை விவாதித்து வருகின்றனர் .

ம்ம்

திருப்பூர் மாவட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அடங்கிய வாட்ஸ் அப் குழுக்களில் இதுதொடர்பாக காரசாரமான விவாதம் போய்க்கொண்டிருக்கிறது .   எடப்பாடி -பன்னீர் ஆதரவாளர்கள் தங்களது தலைவர்தான் பொதுச்செயலாளராக வரவேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர் .இதனால் அவர்களுக்கு இடையே காரசாரமான விவாதத்தினை பதிவு செய்து வருகின்றனர்.

 இன்னொரு பக்கம் மீம்ஸ் யுத்தம் நடத்திவருகின்றனர்.   அந்த குழுக்களில் உள்ள நடுநிலையாளர்கள் எடப்பாடியோ பன்னீரோ நமக்கு கட்சி தான் முக்கியம் . அதனால் கட்சியினர் கலந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள்.   கட்சிக்கு பாதிப்பு வராத படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.   சிலர் இரண்டு தரப்புக்கும் இடையே நடக்கும் காரசாரமான வாக்குவாதத்தில் இடையே புகுந்து சமரசம் செய்து வைக்கிறார்கள்.