தொட்டில் பழக்கம்! கல்வீசிய அமைச்சர் நாசரை விளாசும் பாஜக

 
ச

நாற்காலி எடுத்து வர தாமதம் ஆனதற்காக தொண்டர்கள் மீது கல்லை எடுத்து வீசி எறிந்த அமைச்சர் நாசரின் செயலை பாஜக கடுமையாக விமர்சித்து உள்ளது.

 திருவள்ளுவர் அருகே ஐ.சி.எம்.ஆர் கலைஞர் திடலில்   திமுக சார்பில் நாளை மாலையில் வீர வணக்க நாள் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.  முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உட்காருமிடம்,  முதல்வர் பங்கேற்கும் மேடை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய பால்வளத் துறை அமைச்சர் நாசர் இன்று சென்றார்.

ர்

 அப்போது அமைச்சர் நாசர் உட்காருவதற்கு நாற்காலி கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.   இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர்,  சக கட்சிக்காரர்களை பார்த்து ஆவேசமாக, போடா நாற்காலியை எடுத்து வா..ஒரு சேர் எடுத்துவா..யார்ட்ட.. என்று சொல்லி கல்லை எடுத்து எறிந்தார்.   தமிழ்நாட்டின் அமைச்சராக இருக்கும் ஒருவர் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இப்படி அநாகரிகமாக  தொண்டர்கள் மீது கல்லை தூக்கி எறிந்த கட்சிக்காரர்கள்,  அங்கே இருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.  

இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.    தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், ஒரு அமைச்சராக இருக்கும் ஒருவர் இப்படி செய்யலாமா? என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

’’அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.......  மலரும் நினைவுகள்? தொட்டில் பழக்கம்!’’என்று கடுமையாக விமர்சித்துள்ளார் தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி.