குடும்பத்தோடு குமாளம் போடும் திமுக, அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் தாங்காது- கோவை செல்வராஜ்

 
covai selvaraj

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,“41 ஆயிரம் கோடி ஊழல் பற்றி ஜே.சி.டி. பிரபாகர் வெளியிட வேண்டிய நேரத்தில் வெளியிடுவார். அப்போது எடப்பாடி பழனிசாமி தேர்தலில் நிற்க மாட்டார், சிறையில் இருப்பார். ஓ.பன்னீர்செல்வம் கையொப்பம் இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியால் ஒண்ணுமே செய்ய முடியாது.சசிகலா இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்க்கை இல்லை. சசிகலா பழனிசாமி அமரச் சொன்னால் கூட பின்னால் கையை கட்டி நின்று கொண்டிருப்பார். ஜாதி வெறி பிடித்து எடப்பாடி பழனிச்சாமி அலைகிறார். 

குடும்பத்தோடு குமாளம் போடும் கட்சி தான் திமுக. அதிமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்தால் திமுக தாங்காது. அதிமுகவின் கடந்த கால வரலாறு பற்றி திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது. அவர் அப்போது பால்குடித்து கொண்டு இருந்து இருப்பார்” என விமர்சித்தார்.