“முட்டாப் பையன் எடப்பாடிக்கு அதிமுகவின் வரலாறு தெரியுமா?சாதி வெறியில் ஆட்டம்”

 
edappadi palanisamy

சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார். 

ஓபிஸ்க்கு வழங்கிய தீர்ப்பால் சத்தியத்தின் பக்கம் நின்ற நீதிமன்றம் - கோவை  செல்வராஜ் | nakkheeran

அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது தகுதித், தராதாரம் இல்லாமால், மூன்றாம் தர அரசியல் வாதி போல் ஜே.சி.டி பிரபாகர் மற்றும் என்னை  பேசியுள்ளார். அவரின் தரகுறைவான பொறுப்பெற்ற செயலை அதிமுகவினர் கேவலாக பார்க்கின்றனர். என்னையும், ஜே.சி.டி பிரபாகரையும் எடப்பாடி பழனிச்சாமி தரகுறைவாக பேசியது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் வரலாறு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமிதான். கடந்த காலங்களில் வாய் மூடி உட்கார்ந்து கொண்டிருந்தவர் தான் எடப்பாடி, துரோகம் செய்வதை தவற எடப்பாடிக்கு என்ன தெரியும்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவுக்கு துரோகம் செய்வதவர் தான் எடப்பாடி. இந்தியாவில் மட்டும் இல்லை உலகத்தில் துரோகத்திற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அதை எடப்பாடிக்கு கொடுக்கலாம்.அரசியலில் பண்பாடு தெரியாதவர் எடப்பாடி பழனிச்சாமி. ஆணவத்தின் உச்சியில் புத்தி சுவாதீனம் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். அதிமுகவை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? முட்டாப் பையன் எடப்பாடிக்கு அதிமுகவின் வரலாறு தெரியுமா? அதிமுகவை அழிக்கும் சக்தியாக எடப்பாடி உள்ளார். எங்களைப் பற்றி பேச தகுதியில்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. தமிழகத்தில் 234 தொகுதியிலும் தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. நீங்கள் ஆட்சியில் இருந்தபோது கொடநாடு வழக்கில் ஏன் விசாரணை கமிஷன் அமைக்கவில்லை? அப்போது கொடநாடு வழக்கில் தொடர்புடைய கேரள மாநிலத்தைச் சேர்ந்த 7 பேரை ஏன் கைது செய்யவில்லை? அதிமுகவிற்கு ஏழரை நாட்டு சனி தான் எடப்பாடி பழனிச்சாமி. இதற்குப் பின்பு எங்களைப் பற்றி தகாத முறையில் பேசினால் அவர் எங்கு சென்றாலும் கருப்புக்கொடி காட்டப்படும்" எனக் கூறினார்.