பொன்முடி எழுப்பிய சர்ச்சை! கண்டுகொள்ளாமல் மேடையேறிய எல்.முருகன்

 
mu

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா நடந்தது.   விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமை தாங்கி நடத்தினார்.   மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இந்த விழாவில் கௌரவ உறுப்பினராக பங்கேற்றார்.  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்த விழாவில் பங்கேற்கவில்லை.  இந்த விழாவை புறக்கணிப்பதாக நேற்றே அவர் அறிவித்திருந்த நிலையில் இன்று விழாவில்  பங்கேற்கவில்லை.

pp

 பொதுவாக பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழாவை துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தான் முடிவு செய்யும்.  ஆனால் காமராஜர் பல்கலைக்கழகம்   பட்டமளிப்பு விழா தொடர்பாக எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.   பிறந்தநாள் வேந்தராக உள்ள கவர்னர் அலுவலகமே இதை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது.  

 விழாவில் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் எல்.முருகன் கல்வித் துறையை சார்ந்தவர் அல்ல.  மேலும் அவர் இணை அமைச்சர்தான்.

 பட்டமளிப்பு விழாவிற்கு இதுவரை மத்திய அமைச்சர் யாரையும் அழைக்கப்படாத நிலையில் எனக்கு பிறகு உரையாற்றும் படி மத்திய இணைய அமைச்சர் எல்.முருகனை அழைத்து இருப்பதில் ஆளுநர் நோக்கம் என்ன?   இதை பார்க்கும் போது மாணவர்களுடைய அரசியல் குறித்து நடவடிக்கையில் ஈடுபடுகிறாரோ ஆளுநர் என்ற சந்தேகம் எழுகிறது.    அதன் காரணமாகவே நான் இங்கு பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்திருக்கிறார்.   விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்த நிலையில் மத்திய அமைச்சர் முருகன் விழாவில் பங்கேற்றார்.

சர்ச்சையின் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.