காங்கிரஸ்காரனுக்கு புத்தி மட்டு - பாஜக கடும் தாக்கு

 
ர்

 மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியின் மகள் ஜோஷி ராணி(18) கோவாவில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்துகிறார் என்றும்,  அந்த ஓட்டலில் உள்ள மதுபான விடுதிக்கு இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்றிருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தனர் காங்கிரசார் .  இதனால் ஸ்மிருதி ராணியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் , நேட்டா டிசோஷா ஆகியோர் குற்றம் சாட்டி வந்தனர்.

 காங்கிரசாரின் இந்த குற்றச்சாட்டுகளை ஸ்மிருதி ராணி திட்டவட்டமாக மறுத்திருந்தார்.   ஜோஷி ராணி மதுபான விடுதி எதுவும் நடத்தவில்லை.  அவள் படித்துக் கொண்டு வருகிறார்.  எங்களை களங்கப்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே இந்த தனிப்பட்ட தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் .  இதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார் ஸ்மிருந்தி ராணி.

ச்ம்

 ஜோஷி ராணி சட்டவிரோதமாக பார் நடத்துவதாக காங்கிரசார் ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டியிருந்த நிலையில் இது குறித்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம் பவன் கேரா, ஜெய்ராம் ரமேஷ் , நேட்டா டிசோஷா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது.  ஸ்மிருதி ராணியின் மகள் மீது சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பாக பேஸ்புக்,  டுவிட்டர், யூ டியூப் அனைத்து சமூக வலைதளப் பதவிகளையும் நீக்க வேண்டும்.  இந்த பதிவுகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று மூன்று பேருக்கும் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி,  ‘’ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்று சொல்வார்கள். காங்கிரஸ்காரனுக்கும் புத்தி மட்டு என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்! இனியாவது பொய் சொல்வதை கை விட்டு ஆக்க பூர்வமான அரசியலில் ஈடுபடுமா காங்கிரஸ்? ’’என்று கேட்கிறார்.

ன்
 
மேலும்,  ‘’மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியின் மகள் கோவாவில் மது கூடம் வைத்திருக்கிறார் என்ற அவதூறான பதிவுகளை உடனடியாக காங்கிரஸ் தலைவர்கள் நீக்க வேண்டும். ஸ்மிரிதி இராணி மகள் மீது சுமத்திய பழிக்கு எந்த முகாந்திரமும், அடிப்படை ஆதாரமும் இல்லை என தில்லி உயர்நீதிமன்றம் கண்டிப்பு’’காட்டியதை குறிப்பிட்டிருக்கிறார்.