கர்நாடக அரசின் விளம்பர விவகாரம்.. இந்திய வரலாற்றில் இருந்து நேருவை அழிக்க பா.ஜ.க.வின் சதி தொடர்கிறது... காங்கிரஸ்

 
நேரு

கர்நாடகா அரசின் விளம்பரத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் நேரு இடம்பெறாததை காங்கிரஸ் கண்டித்துள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கர்நாடாக பா.ஜ.க. அரசு, வீடுகளில் தேசியக் கொடி  பிரச்சாரத்தை முன்னிலைப்படுத்த பத்திரிகையில் முழு பக்க அளவில் விளம்பரம் செய்து இருந்தது. அந்த விளம்பரத்தில் இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் படங்கள் இடம் பெற்று இருந்தன. அதில் நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு இடம் பெறவில்லை. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் விளம்பரம்

இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவர் பி.வி.ஸ்ரீனிவாஸ் டிவிட்டரில், இந்திய வரலாற்றில் இருந்து நேருவை அழிக்க பா.ஜ.க.வின் சதி தொடர்கிறது. ஆனால் நேரு உயர்ந்தவர்,  நேரு பெரியவர்,  நேரு அழியாதவர் மற்றும் நேரு அடிப்படையில் ஒரு தேசத்தை கட்டியமைப்பவர் என பதிவு செய்துள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், நேரு இப்படிப்பட்ட அற்பதனங்களில் இருந்து தப்பிப்பார். தனது பதவியை காப்பாற்றிக் கொள்ள துடிக்கும் கர்நாடக முதல்வருக்கு தான் செய்தது தனது தந்தை எஸ்.ஆருக்கு அவமானம் என்று தெரியும். பொம்மை மற்றும் அவரது தந்தையின் முதல் அரசியல் குரு எம்.என். ராய் இருவரும் நேருவின் சிறந்த அபிமானிகள், பிந்தையவர் நண்பரும் கூட. இது பரிதாபத்திற்குரியது என பதிவு செய்து இருந்தார்.