யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்... சர்வாதிகாரியின் பயத்தையும், சீற்றத்தையும் காட்டுகிறது.. மோடியை தாக்கிய காங்கிரஸ்

 
மோடி

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது சர்வாதிகாரியின் பயத்தையும் சீற்றத்தையும் காட்டுகிறது என பிரதமர் மோடியை  காங்கிரஸ் மறைமுகமாக தாக்கியது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பணமோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள ஹெரால்டு ஹவுஸில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று ஹெரால்டு ஹவுஸில் உள்ள யங் இந்தியா வளாகத்துக்கு அமலாக்கத்துறை நேற்று சீல் வைத்தனர். இதனையடுத்து அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைமையக பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டு, போலீசார் குவிக்கப்பட்டனர்.

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைப்பு
 
யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஸ்ரீனிவாஸ் பி.வி. டிவிட்டரில், இனி எந்த கோரிக்கையும் இருக்காது. இப்போது போர் இருக்கும் என பதிவு செய்துள்ளார்.  காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில்,  உண்மையிலன் குரல் காவல்துறை காவலர்களுக்க பயப்படாது. 

காங்கிரஸ்

காந்தியின் சீடர்கள் இந்த இருளில் இருந்து போராடி வெற்றி பெறுவார்கள். நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பது, காங்கிரஸ் தலைமையகத்தை போலீஸ் காவலில் சிறை வைத்தது சர்வாதிகாரியின் பயத்தையும் சீற்றத்தையும் காட்டுகிறது. ஆனால் பணவீக்கம் மற்றும் வேலையின்மை பற்றிய கேள்விகள் இன்னும் கேட்கப்படும் என பதிவு செய்யப்பட்டுள்ளது.