குஜராத் தேர்தலுக்கான காங்கிரஸின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியல் வெளியீடு.. சசி தரூர் மிஸ்சிங்

 
சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்ட சசி தரூருக்கு அரஸ்ட் வாரண்ட்!

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் நட்சத்திர  பிரச்சாரகர்கள் பட்டியலை நேற்று அந்த கட்சி வெளியிட்டது. இந்த பட்டியலில் சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி உள்ளிட்ட ஜி23 தலைவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் நட்சத்திர  பிரச்சாரகர்கள் பட்டியலை நேற்று அந்த கட்சி வெளியிட்டது. அந்த பட்டியலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, அசோக் கெலாட், சச்சின் பைலட், ஜிக்னேஷ்  மேவானி மற்றும் கன்னையா குமார் உள்பட பல தலைவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. 

காங்கிரஸ்

அதேசமயம், காங்கிரஸின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி மற்றும் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா போன்ற காங்கிரஸின் முக்கிய தலைவர்கள் பெயர் இடம்பெறவில்லை. இதில், சசி தரூர், ஆனந்த் சர்மா மற்றும் மணிஷ் திவாரி ஆகியோர், 2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்திர தலைவர் தேவை என்று சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய ஜி23 தலைவர்களில் முக்கியமானவர்கள். சசி தரூர் அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.

ஆனந்த் சர்மா

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் நட்சத்திர  பிரச்சாரகர்கள் பட்டியலில் சசி தரூர், ஆனந்த் சர்மா, மணிஷ் திவாரி ஆகியோரின் பெயர்களை சேர்க்காதது, அவர்களை காங்கிரஸ் தலைமை ஒரங்கட்டுகிறது என்று தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தில் 1995ம் ஆண்டு முதல் பா.ஜ.க.தான் ஆட்சியில் உள்ளது. இந்த முறை எப்படியேனும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் முனைப்பில் காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.