ராமர் பெயரில் இந்த அரசு ராவணணை வணங்குகிறது... பா.ஜ.க. அரசுக்கு பதிலடி கொடுத்த ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

 
பா.ஜ.க.

ராமர் கோயில் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தான் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினர் என்ற பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு, ராமர் பெயரில் இந்த அரசு ராவணணை வணங்குகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.


காங்கிரஸ் கட்சியினர் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 5)  நாடு முழுவதும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிராக கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், ராமர் கோயில் கட்டுமான பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தே காங்கிரஸ் கட்சியினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர் என பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் குற்றம் சாட்டினர். பா.ஜ.க.வின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி  கொடுத்துள்ளது.

கருப்பு உடை அணிந்து காங்கிரஸார் போராட்டம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மக்களவை எம்.பி.யுமான ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: விண்ணை தொடும் விலைவாசி உயர்வு மற்றும் வரலாறு காணாத வேலையில்லாத திண்டாட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் நடத்தி வரும் போராட்டத்தை அவர்களால் (பா.ஜ.க.) பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதனால்தான் அவர்கள் தங்கள் ஒரே ஆயுதமான ராமர் (ராமர் கோயில்) மூலம் சாமானியர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

ஆஹிர் ரஞ்சன் சவுத்ரி

ராமர் பெயரில் இந்த அரசு ராவணணை வணங்குகிறது. மக்கள் அவர்களின் (பா.ஜ.க.) ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் இந்த அரசை மக்கள் விரோத மற்றும் கார்ப்பரேட் சார்பு என்று அம்பலப்படுத்தியது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 2022 ஆகஸ்ட் 5ம் தேதிதான்  உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த வெள்ளிக்கிழமையோடு அந்த நிகழ்வு நடைபெற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.