தி காஷ்மீர் பைல்ஸ்.. வரலாற்றை திரித்து கோபத்தை தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது... ஜெய்ராம் ரமேஷ்

 
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் பார்க்க அரை நாள் விடுமுறை.. அசாம் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வரலாற்றை திரித்து கோபத்தை தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார். 

1990ன் தொடக்கத்தில் ஜம்மு காஷ்மீரில் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பண்டிட் சமூகத்தினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். பண்டிட் சமூகத்தினர் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, அனுபம் கெர், தர்ஷன் குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டது. 

பா.ஜ.க.

இந்த திரைப்படம் கடந்த 11ம் தேதியன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. காஷ்மீரில் பண்டிட்டுகள் வெளியேற்றத்துக்கு காங்கிரஸ்தான் என்று பா.ஜ.க. குற்றம் சாட்டியது. ஆனால் காங்கிரஸோ பா.ஜ.க.தான் காரணம் என்று பதிலடி கொடுத்தது. இந்நிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் படம் வரலாற்றை திரித்து கோபத்தை தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டரில், சில படங்கள் மாற்றத்தை தூண்டும். காஷ்மீர் பைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது. நீதி, மறுவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு உண்மை வழிவகுக்கும். பிரச்சாரம் உண்மைகளை திரிக்கிறது, வரலாற்றை திரித்து கோபத்தை தூண்டி வன்முறையை ஊக்குவிக்கிறது. ஆட்சியாளர் காயங்களை ஆற்றுவார்கள். பிரித்து ஆட்சி செய்ய மதவாதிகள் பயத்தையும் தப்பெண்ணத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பதிவு செய்துள்ளார்.